அவுஸ்ரேலியாவில் இன்று முதல் தற்காலிக வேலை விசா திட்டம்!

அவுஸ்ரேலியாவில் தற்காலிக வேலை விசா Temporary Work visa (subclass 457) திட்டத்திற்கான புதிய தொழிற்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் வேலை செய்வதற்கு 457 விசா திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதற்குப் பதிலாக தற்போது மாற்றியமைக்கப்பட்ட தற்காலிக வேலை விசா தொழிற்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்ற இந்த தற்காலிக வேலை விசா திட்டத்தின் கீழ் வெளிநாட்டவர்கள் பணிநிமித்தம் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முடியும்.

இதன்படி Medium and Long‑term Strategic Skills List (MLTSSL) மற்றும் Short‑term Skilled Occupation List (STSOL) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தொழில்துறையில் ஏற்படும் திறமையின் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு, வெளிநாட்டவரை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வர வழங்கப்படும் விசாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அவுஸ்ரேலிய தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கப் போதுமான கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.