அவுஸ்திரேலியமுரசு

பப்புவா நியூ கினியாவில் கட்டுக்கடங்காத கலவரம்!

பப்புவா நியூ கினியாவின் சதர்ன் ஹைலேண்ட் மாகாணத்தில் கலவரம் வெடித்ததையடுத்து 9 மாதங்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியாவின் சதர்ன் ஹைலேண்ட மாகாண கவர்னர் தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்த தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கோர்ட் தீர்ப்பும் அவருக்கு எதிராக அமைந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் வியாழக்கிழமை கடும் வன்முறையில் ஈடுபட்டனர். மாகாண தலைநகரான மென்டியில் ஒரு விமானத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் சில கட்டிடங்களுக்கும் தீ வைத்தனர். நிலநடுக்க ...

Read More »

வடகொரிய அதிபரிடம் எனது தனிப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்துள்ளேன்! -டிரம்ப்

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு, சிங்கப்பூரில் ஜூன் 12–ந் திகதி நடந்தது. இந்த சந்திப்பு இணக்கமான முறையில் நடந்தது. முதலில் நேருக்கு நேரும், பின்னர் தூதுக்குழுவினருடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இரு தலைவர்களும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று வாஷிங்டனில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘கிம் ஜாங் உன்னுடன் நடந்த சந்திப்பு மிக முக்கியமானது. இந்த பேச்சுவார்த்தை ...

Read More »

அவுஸ்திரேலியாவிலிருந்து சிறிலங்கா வந்த உயிரினம்!

அவுஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் சிறிலங்காவிற்கு பல்லிகளை போன்ற அபூர்வ உயிரினங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த உயிரினங்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரினங்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அவுஸ்திரேலியாவில் இருந்து சில பொதிகள் விமானம் மூலம் சிறிலங்காவிற்கு  அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. அந்த பொதியில் விலாசம் எழுதப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த பொதியை பெற்றுக்கொள்ள வருமாறு பொதியில் இருந்த விலாசத்திற்கு அறிவித்த போதும் அதனை ...

Read More »

தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலியா அரசு சம்மதம்

திருப்பனந்தாள், சீர்காழி, மயிலாடுதுறை உள்பட தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டுள்ள மேலும் 7 சிலைகள் மீட்கப்பட இருக்கிறது. இந்த சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு சம்மதம் தெரிவித்து உள்ளது. தமிழக கோவில்களில் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்திச்சென்று விற்பனை செய்யப்பட்ட சாமி சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர்  மீட்டு வருகிறார்கள். ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச்செல்லப்பட்ட 3 சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறை  மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது மேலும் 7 சாமி சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருப்பது ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் வருவோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் வருபவர் தனது ஆங்கிலப் புலமையை நிரூபிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும். இதுவொருபுறம் இருக்க Test of English as a Foreign Language Paper-Based பரீட்சையை subclass 500 மாணவர் விசாவுக்காக ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. TOEFL Paper-Based பரீட்சையின் மூலம் ஒருவரின் ஆங்கிலம் பேசும் திறன் புலப்படுவதில்லை. இதன் காரணத்தினால் கடந்த ஆண்டு ஒக்டோபரில் முன்னெடுக்கப்பட்ட மீளாய்வின் அடிப்படையில் இப்பரீட்சை முடிவினை ஏற்றுக்கொள்வதில்லை என ...

Read More »

1.1 மில்லியன் பெறுமதியான வீடு எரிந்து சாம்பலானது!

அவுஸ்திரேலியாவில் 1.1 மில்லியன் ரூபாய் பெறுமதி வாய்ந்த வீடு சில மணி நேரத்தில் எரிந்து சாம்பலாகியுள்ளது. விற்பதற்கு முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் (Brisbane) நகரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார். மேலும் குறித்த வீட்டுப் பெண் தனது நாயை வாக்கிங்கு அழைத்துக் கொண்டு வெளியே சென்றமையால் உயிர் சேதம் ஏற்படவில்லை. டிம்பர் மரத்திலான இரு வீடுகள் பற்றி எரிவதைப் ...

Read More »

மனுஸ் தடுப்பில் உள்ளவர்களுக்கு 70 மில்லியன் டொலர் நஷ்டஈடு!

அவுஸ்திரேலிய அரசு வழங்கிய 70 மில்லியன் டொலர் நஷ்டஈடு மனுஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் 1,700 பேருக்கு, பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்கள் அங்கு தாம் நடத்தப்பட்ட முறை தொடர்பில், அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்திற்கெதிராக கூட்டு சட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்த நிலையில் மனுஸ் தடுப்பிலுள்ளவர்களுக்கு சுமார் 70 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை இழப்பீடாக வழங்குவதற்கு அரசு முன்வந்திருந்தது. இதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜுன் 15ம் திகதிக்கு முன்னர் 1693 பேருக்கு குறித்த பணம் ...

Read More »

மிதிவெடிகளை அகற்றுவதற்கு அவுஸ்திரேலியஅரசு 85 கோடி ரூபாய் நிதியுதவி!

இலங்கையில் மிதிவெடிகளை அகற்றுவதற்காக எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு 700,000 அவுஸ்திரேலிய டொலர்களை (சுமார் 84.5 கோடி ரூபாய்) வழங்க அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. இந்த நிதியினால் வடமாகாணத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் மிதிவெடிகளை அகற்றுவதற்கு தேவையான பொருளாதார உதவியை வழங்குவதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கையில் மிதிவெடிகளை அகற்றுவதற்கு அதிகமாக ஆதரவை வழங்கிவரும் நாடாக அவுஸ்திரேலியா காணப்படுவதுடன், 2009ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கியுள்ளது.

Read More »

அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்தில் சிறுவன் பலி!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற குடும்ப தகராறின் போது 5 வயதுச் சிறுவன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி Carlingford பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்ப தகராறின்போது குறித்த சிறுவன் மீது கத்திக்குத்தை மேற்கொண்ட குற்றச்சாட்டில் குறித்த சிறுவனின் தந்தை என கூறப்படும் 36 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை சிறுவன் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்படுவதை அவனது பாட்டி தடுக்க முற்பட்டுள்ளார். இருப்பினும் எவ்வித பயனும் இன்றி படுகாயங்களுக்கு உள்ளான சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட போது ...

Read More »

அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருட சிறை!

அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருட சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மனோஜ் மார்க் என்ற 25 வயதுடைய இலங்கை இளைஞன் ஒருவருக்கே நீதிமன்றம் நேற்று (07.06.2018) இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. இதில் 9 ஆண்டுகள் அவர் கட்டாயம் சிறையில் கழிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. 2017 ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் குறித்த இலங்கையர் சென்றிருந்தார். அப்போது தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறி விமானத்தில் ரகளை செய்ததை அடுத்து விமானம் ...

Read More »