இலங்கையில் மிதிவெடிகளை அகற்றுவதற்காக எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு 700,000 அவுஸ்திரேலிய டொலர்களை (சுமார் 84.5 கோடி ரூபாய்) வழங்க அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது.
இந்த நிதியினால் வடமாகாணத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் மிதிவெடிகளை அகற்றுவதற்கு தேவையான பொருளாதார உதவியை வழங்குவதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் மிதிவெடிகளை அகற்றுவதற்கு அதிகமாக ஆதரவை வழங்கிவரும் நாடாக அவுஸ்திரேலியா காணப்படுவதுடன், 2009ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கியுள்ளது.