அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருட சிறை!

அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருட சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மனோஜ் மார்க் என்ற 25 வயதுடைய இலங்கை இளைஞன் ஒருவருக்கே நீதிமன்றம் நேற்று (07.06.2018) இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இதில் 9 ஆண்டுகள் அவர் கட்டாயம் சிறையில் கழிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

2017 ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் குறித்த இலங்கையர் சென்றிருந்தார்.

அப்போது தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறி விமானத்தில் ரகளை செய்ததை அடுத்து விமானம் மீண்டும் மெல்போர்னில் தரையிறக்கப்பட்டது.

பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் செயல்பட்டதால் குறித்த இலங்கை பயணியை மெல்போர்ன் பொலிசார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கையிலிருந்து கல்வி கற்பதற்காக வந்து டண்டினோங் பகுதியில் குறித்த இளைஞன் வாழ்ந்து வந்துள்ளார். மேலும் குறித்த இளைஞன் ஐஸ் போதைப்பொருளை உட்கொண்டிருந்ததாகவும் அதன் காரணமாக ஏற்பட்ட உளவியல் பாதிப்பினால் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.