அவுஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் வருவோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் வருபவர் தனது ஆங்கிலப் புலமையை நிரூபிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
இதுவொருபுறம் இருக்க Test of English as a Foreign Language Paper-Based பரீட்சையை subclass 500 மாணவர் விசாவுக்காக ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
TOEFL Paper-Based பரீட்சையின் மூலம் ஒருவரின் ஆங்கிலம் பேசும் திறன் புலப்படுவதில்லை. இதன் காரணத்தினால் கடந்த ஆண்டு ஒக்டோபரில் முன்னெடுக்கப்பட்ட மீளாய்வின் அடிப்படையில் இப்பரீட்சை முடிவினை ஏற்றுக்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் TOEFL internet based பரீட்சை முடிவு உள்துறை அமைச்சால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுதவிர IELTS (International English Language Testing System), Cambridge English: Advanced (Certificate in Advanced English), Pearson Test of English Academic and Occupational English Test ஆகிய தேர்வுகள் ஏற்கப்படுகிறது.