அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலியாவில் இன்று முதல் நேரமாற்றம்!

அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் நேரமாற்றம் இன்று(7) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு அமுலுக்கு வருகிறது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2மணிக்கு ஒரு மணிநேரம் கூடுதலாக முன்னோக்கி நகரவுள்ளது. குயின்ஸ்லாந்து, Northern Territory மற்றும் மேற்கு அவுஸ்திரேலியா ஆகிய மாநிலங்கள் இந்நேரமாற்றத்தில் பங்கெடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் இருந்த 35 பேரும் எங்கே?

கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் கடந்தவார இறுதியில் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த முகாமில் எஞ்சியிருந்த 35 பேரையும் அவுஸ்திரேலியாவிலுள்ள முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி சட்டவிரோதமாக படகுமூலம் வந்தவர்களை தடுத்து வைத்து பரீசிலிக்கவென கடந்த 2008ம் ஆண்டு கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் நிர்மாணிக்கப்பட்டது. சுமார் 10 ஆண்டுகள் கழித்து கடந்தவார இறுதியில் மூடப்பட்டதை அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் David Coleman உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் கிறிஸ்மஸ் தீவில் எஞ்சியிருந்த 35 பேர் விமானம் மூலம் அவுஸ்திரேலியாவிலுள்ள தடுப்பு முகாம்களுக்கு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் வீதி விபத்து ஏற்படும் பகுதியாக மெல்போர்ன் வடக்கிலுள்ள Plenty Road, Bundoora என கூறப்பட்டுள்ளது. இந்த தகவிலினை பிரபல காப்புறுதி நிறுவனமான AAMI-இன் புதிய அறிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஓகஸ்ட் 2017 முதல் திகதியிலிருந்து 31 ஜுலை 2018 ற்க்கு இடையில் நாடு முழுவதும் ஏற்பட்ட வாகன விபத்துக்களை அடிப்படையாக வைத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் பிரகாரம் கடந்த ஒரு ஆண்டில் மெல்போர்னில் மட்டுமல்லாது அவுஸ்திரேலியா முழுவதிலும் அதிக வீதி விபத்துக்கள் இடம்பெற்ற பகுதியாக மேற்குறித்த பகுதி உள்ளது. ...

Read More »

உலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோய் ஒழிப்பு!

ஆஸ்திரேலியாவில் வருகிற 2022-ம் ஆண்டுக்குள் கர்ப்பபை புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்ப்பபை புற்றுநோய் பெண்களை பெருமளவில் பாதித்து உயிரை பறிக்கிறது. வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் இந்த நோய் பாதித்தவர்களில் 10 பெண்களில் 9 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த நோய் ‘எச்.பி.வி.’ (கியூமன்) என்ற வைரஸ்களால் ஏற்படுகிறது. இத்தகைய வைரஸ் 100 விதமாக உள்ளன. அந்த வைரஸ் தாக்கிய பெண்களுக்கு தொடக்கத்தில் நோயின் பாதிப்பு தெரியாது. அதற்கான அறிகுறிகள் தென் படாது. பின்னர் ...

Read More »

கொலை வழக்குப் பதிய கோரிக்கை!

அவுஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் கொல்லப்பட்ட வழக்கில், விபத்துக்கு காரணமான சாரதி மீது கொலை வழக்கு பதிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று சிட்னி நகரில் நடந்த சாலை விபத்தில் புதுமண தம்பதிகளான் Katherine Hoang மற்றும் அவரது உறவினர் 17 வயது Belinda Hoang ஆகியோர் கொல்லப்பட்டனர்.</p><p>கேத்ரீனின் கணவர் 27 வயதான Bronco Hoang இந்த விபத்தில் படுகாயமடைந்து கோமா நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மட்டுமின்றி விபத்தை ஏற்படுத்திய 29 வயது இளைஞர் ரிச்சார்ட் மொனானு ...

Read More »

கடவுச்சொற்களை கொடுத்தே ஆகவேண்டும்!

அவுஸ்திரேலியாவில் தனிப்பட்டவர்களின் கணனிகள், கைத்தொலைபேசிகளின் கடவுச்சொற்களை விசாரணைகளின் போது கொடுக்கப்பட வேண்டுமென்ற சட்டம் அறிமுகமாகவுள்ளது. விசாரணையின் போது வெளிப்படுத்தாவிட்டால் ஐந்து வருட சிறை மற்றும் 60000 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் (Peter Dutton) கொண்டுவந்திருக்கும் இந்த சட்டமூலம் மூன்று வாசிப்புக்களின் ஊடாக நிறைவேற்ற வேண்டியதாக உள்ளது. தற்போது இரண்டாவது வாசிப்பு நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய தரப்பினருக்கு தெரியாமல் இரகசியமான குற்றங்களை இழைப்பவர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கும் போது அவர்கள் ஒத்துழைக்காவிடின் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பிரபல இசைக் கலைஞர் ரொனி லீச்ட் காலமானார்!

சிறிலங்காவின் பிரபல்யப் பாடகரும், நடிகருமான ரொனி லீச்ட் தனது 65 வயதில் அவுஸ்திரேலியாவில் இன்று காலமானர். இசை நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. சிறிலங்காவின் ( சிங்கள மொழி) பிரபல பாடகரும், நடிகருமான ரொனி லீச்ட் தனது 65 வயதில் அவுஸ்திரேலியாவில் இன்று காலமானர்.

Read More »

விபத்தில் கார்பிணி பெண் மரணம்! கணவர் கோமா நிலையில்!

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது கணவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். கேத்ரீன் (வயது 23) என்ற பெண்ணுக்கும் பிரான்சோ (வயது 25) என்ற இளைஞருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்த நிலையில் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்து கேத்ரீன் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு கேத்ரீனும், பிரான்சோவும் சிட்னியில் உள்ள Orchard Hills பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது காரை பெண் ஓட்டுனர் ஓட்டினார். அப்போது எதிரில் வந்த கார் ஒன்று இவர்கள் பயணித்த ...

Read More »

பிரசவத்தை நேரலை செய்யப்போவதாக அறிவித்த அவுஸ்திரேலிய தாய்!

அவுஸ்திரேலியாவில் தாய் ஒருவர் தனது 4 வது பிரசவத்தை நேரலையாக இன்ஸ்டாகிராமில் ஒளிபரப்புவேன் எனத் தெரிவித்துள்ளார் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த Jessica Hood (வயது 30) என்ற பெண்ணுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது 4வது குழந்தையை பெற்றெடுக்கவுள்ளார். இக்குழந்தைக்குப் பின் வேறு எந்தக் குழந்தையையும் பெற்றுக் கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிராமில் கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளார். தான் சந்தித்த மனநல பிரச்சனைகள் மற்றும் தனது பதிவுகள் என்று பதிவிட்டு வந்துள்ளார். இவரை மூன்று ஆண்டுகளில் 14 ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட நிசாம்தீன் பிணையில் விடுதலை!

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா பிரஜையான 25 வயதுடைய மொஹமட் நிசாம்தீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இவர், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் சார்பாக சிட்னி நகரை குண்டு வைத்துத் தகர்த்தல் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னணி ஆளுமைகளைப் படுகொலை செய்தல் ஆகிய குற்றச்செயல்களுக்கான திட்டங்களை தீட்டிய குற்றச்சாட்டின் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More »