அவுஸ்திரேலியாவில் தனிப்பட்டவர்களின் கணனிகள், கைத்தொலைபேசிகளின் கடவுச்சொற்களை விசாரணைகளின் போது கொடுக்கப்பட வேண்டுமென்ற சட்டம் அறிமுகமாகவுள்ளது.
விசாரணையின் போது வெளிப்படுத்தாவிட்டால் ஐந்து வருட சிறை மற்றும் 60000 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் (Peter Dutton) கொண்டுவந்திருக்கும் இந்த சட்டமூலம் மூன்று வாசிப்புக்களின் ஊடாக நிறைவேற்ற வேண்டியதாக உள்ளது.
தற்போது இரண்டாவது வாசிப்பு நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய தரப்பினருக்கு தெரியாமல் இரகசியமான குற்றங்களை இழைப்பவர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கும் போது அவர்கள் ஒத்துழைக்காவிடின் தண்டனைகள் கடினமாக வேண்டும் என பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.