அவுஸ்திரேலியாவில் வீதி விபத்து ஏற்படும் பகுதியாக மெல்போர்ன் வடக்கிலுள்ள Plenty Road, Bundoora என கூறப்பட்டுள்ளது.
இந்த தகவிலினை பிரபல காப்புறுதி நிறுவனமான AAMI-இன் புதிய அறிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓகஸ்ட் 2017 முதல் திகதியிலிருந்து 31 ஜுலை 2018 ற்க்கு இடையில் நாடு முழுவதும் ஏற்பட்ட வாகன விபத்துக்களை அடிப்படையாக வைத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலின் பிரகாரம் கடந்த ஒரு ஆண்டில் மெல்போர்னில் மட்டுமல்லாது அவுஸ்திரேலியா முழுவதிலும் அதிக வீதி விபத்துக்கள் இடம்பெற்ற பகுதியாக மேற்குறித்த பகுதி உள்ளது.
அதாவது அதிக வீதி விபத்துக்குள் இடம்பெறும் பகுதியில் குறித்த பகுதி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal