கொலை வழக்குப் பதிய கோரிக்கை!

அவுஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் கொல்லப்பட்ட வழக்கில், விபத்துக்கு காரணமான சாரதி மீது கொலை வழக்கு பதிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று சிட்னி நகரில் நடந்த சாலை விபத்தில் புதுமண தம்பதிகளான் Katherine Hoang மற்றும் அவரது உறவினர் 17 வயது Belinda Hoang ஆகியோர் கொல்லப்பட்டனர்.</p><p>கேத்ரீனின் கணவர் 27 வயதான Bronco Hoang இந்த விபத்தில் படுகாயமடைந்து கோமா நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மட்டுமின்றி விபத்தை ஏற்படுத்திய 29 வயது இளைஞர் ரிச்சார்ட் மொனானு மீது 10 பிரிவுகளில் சிட்னி பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

இந்த நிலையில் கேத்ரீனின் பிறக்காது போன இரட்டைக் குழந்தைகளும் இந்த விபத்தில் கொல்லப்பட்டுள்ளதால், குறித்த நபர் மீது கொலை வழக்கும் பதிய வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>விபத்தை ஏற்படுத்திய நபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது இறுதிச்சடங்கிற்கெ என அவரது நண்பர்கள் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 14,000 பவுண்ட்ஸ் தொகை சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>மொனானு தமது காரில் மணிக்கு சுமார் 45 கி.மீ வேகத்தில் தவறான பாதையில் வந்துள்ளதாகவும், அதுவே விபத்துக்கு முக்கிய காரணம் எனவும் தெரியவந்துள்ளது.