அவுஸ்திரேலியமுரசு

அதிசயிக்க வைக்கும் அவுஸ்ரேலியா : சாகச சுற்றுலா போக ஆசையா?

சுற்றுலா தலங்களின் சொர்க்கபுரி அவுஸ்ரேலியா. தொழில்நுட்ப மிரட்டல், இயற்கையின் பேரெழில் என கலந்துகட்டியாக கண்டுகளிக்க ஏராளமான இடங்கள் உண்டு. சாகச விரும்பிகளுக்கு தீனியிடும் பல இடங்கள் இருப்பதுதான் இதன் சிறப்பம்சம். குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் கடலோர பிராந்தியம் அனைத்துவகை சாகச சுற்றுலாக்களின் மையமாக இருக்கிறது. சாகசங்களில் முதன்மையானது பலூனில் பறந்து ரசிக்கும் த்ரில்லான பயணம். கோல்ட் கோஸ்ட் ‘ஹாட் ஏர் பலூன்’ பயணம் புது அனுபவத்தை தரும். பல ஆண்டுகளாக மிகப் பாதுகாப்பும் நேர்த்தியுமாக இந்த பலூன் பயணங்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். ...

Read More »

அவுஸ்ரேலிய துரித உணவு துறையில் பணியாற்ற வெளிநாட்டினருக்கு விசா கிடைப்பது கடினம்

துரித உணவு சேவை துறையில் உள்ள பணியிடங்களில் அமர்த்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அளித்து வந்த விசா சலுகையை பெருமளவில் அவுஸ்ரேலிய நிறுத்தப் போவதாக, அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் தெரிவித்தார். அவுஸ்ரேலியா குடியேற்றத்துறை அமைச்சரான பீட்டர் டட்டன் இது குறித்து கூறுகையில், அவுஸ்ரேலிய மக்களின் வேலை வாய்ப்புக்களை பாதுகாத்திடும் வகையில் இந்த முடிவு வடிவமைக்கப்பட்டதாக தெரிவித்தார். கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து, மெக்டொனால்ட்ஸ், கேஃஎப்சி மற்றும் ஹங்கிரி ஜேக்ஸ் போன்ற துரித உணவகங்களில் பணிபுரிய 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு, 457 என்றழைக்கப்படும் பணி விசா ...

Read More »

அவுஸ்ரேலியா சுழற்பந்தில் ஜொலிக்க காரணம் ஒரு தமிழர்!

மலேசியாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? கிரிக்கெட்டில் அந்த நாடு பிரபலமும் இல்லை. ஆனால், அந்த நாட்டில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த வீரர் ஒருவர் பிறந்து வளர்ந்திருக்கிறார். புனேயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணியிடம் இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைத் தழுவியது. அவுஸ்ரேலிய ஸ்பின்னர் ஸ்டீவ் ஓ கீஃப் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர், விட்டுக் கொடுத்தது 35 ரன்கள் மட்டுமே. ஒரே டெஸ்டில் பெயர் வாங்கி விட்டார். அவுஸ்ரேலிய விமானப்படையில் ...

Read More »

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை தொழில்நுட்பப் பயிற்சி அளித்தவர் அவுஸ்ரேலியாவில் கைது

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்த நபரை அவுஸ்ரேலிய  காவல் துறை நேற்று (28)  கைது செய்தனர். சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், தற்போது ஏவுகணை தொழில் நுட்பத்தில் மிகவும் முன்னேறி வருகின்றனர். இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்ததாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரை அவுஸ்ரேலியா காவல்துறையினர்   நேற்று கைது செய்தனர். 42 வயதான அந்த நபர், ஏவுகணைகள் கண்டறிவது எப்படி மற்றும் சொந்தமாக ஏவுகணைகள் உருவாக்குவது எப்படி? என ...

Read More »

ஈழத்துப்பாடகர் சாந்தன் வணக்க நிகழ்வுகள் – சிட்னி, மெல்பேர்ண்

தாயகவிடுதலைக்கான போராட்டத்தில் தனது குரலால் விடுதலை எழுச்சியை மக்களிடத்தில் காவிச்சென்று விடுதலைப் பணியாற்றிய சாந்தன் அவர்களின் இழப்பு துயரமானது. பல நூற்றுக்கணக்கான விடுதலை எழுச்சிப் பாடல்களை பாடியும் தனது இரு புதல்வர்களை மாவீரர்களாக மண்ணின் விடுதலைக்கு அர்ப்பணித்தும் உறுதியாக போரின் இறுதிவரை ஓய்வில்லாமல் விடுதலைக்காக உழைத்திருந்தார். போர் முடிவடைந்த கடந்த எட்டு ஆண்டுகளில் பல போராளிகளை பல செயற்பாட்டாளர்களை நோய் என்ற காரணத்தோடு மரணித்துப்போய்க்கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். பாரிய போர் அவலத்தைச் சுமந்தவர்களின் வாழ்வு தொடர்ந்தும் கவலைதோய்ந்த கணங்களாகவே நகர்ந்துகொண்டிருக்கின்றது. தனது குரலால் எம்தேசத்தின் ...

Read More »

எல்நினோ தாக்கம் பற்றி அவுஸ்ரேலியாவின் அதிர்ச்சி தகவல்!

காலநிலை மாற்றம் காரணமாக உருவாகும் எல் நினோவின் தாக்கமானது, இவ்வருடம் 50 சதவீதத்தால் அதிகரிக்குமென, அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. எல்நினோ எனப்படும் காலநிலை தாக்கத்தால்,  மழை காலத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழிவதுடன், கோடை காலத்தில் அதிகளவான வெப்ப தாக்கம் இருக்குமெனவும், அதனால் அளவுகடந்த வறட்சி, மழை வெள்ளம் ஏற்படுவதற்கு சாதகமாக அமையுமென அவுஸ்ரேலியாவின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கடந்த காலங்களை விட  2017 ஆம் ஆண்டில் எல் நினோவின் தாக்கம் தொடர்பாக குறித்த ...

Read More »

மூடப்பட்ட எல்லைக் கதவுகள்: அகதிகளுக்கு இடமில்லை! -அவுஸ்ரேலியா

எல்லைக் கதவுகள் மூடப்பட்டே உள்ளதால், அகதிகளுக்கு இடமில்லை என்று அவுஸ்ரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஓபாமா ஆட்சியில் அவுஸ்ரேலியா -அமெரிக்கா இடையே அகதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஒருமுறை மட்டும் அமெரிக்காவில் அகதிகளை குடியமர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவுஸ்ரேலியா – அமெரிக்கா இடையே ஏற்பட்ட அகதிகள் மீள்குடியமர்த்தும் ஒப்பந்தம் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், அகதிகள் தொடர்பான கொள்கையை மீண்டும் அவுஸ்ரேலியா வெளிப்படுத்தியுள்ளது.

Read More »

அவுஸ்திரேலியாவில் கணவனை கொன்ற பெண்! நன்னடத்தையால் விடுதலை

கணவனைக் கொன்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவப் பெண் சாமரி லியனகே, இந்த வாரம் விடுதலை செய்யப்படவுள்ளார் என அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இலங்கைப் பெண்ணின், நன்னடத்தை காரணமாகவே அவர் விடுதலை செய்யப்படவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கை மருத்துவப் பெண், தனது கணவனை கடந்த 2014ம் ஆண்டு ஜுன் மாதம் அவர்களது இல்லத்தில் வைத்து சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார். இந்த குற்றச்சாட்டு காரணமாக குறித்த பெண்ணுக்கு கடந்த ...

Read More »

Tasmania மாநிலத்தில் குடியேற விரும்புகிறீர்களா?

அவுஸ்ரேலியாவின் டஸ்மேனியா மாநிலத்தில் குடியேற விரும்புகிறீர்களா? இதற்கான வழிகளை அம்மாநில அரசு இலகுவாக்கியிருக்கிறது. வழமையாக Skilled Migration-க்கு விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த மாநிலங்களுக்குரிய Skilled Occupations List (SOL) தொழிற்பட்டியலிலிருக்கும் வேலைகளுக்கே விண்ணப்பிக்க முடியும். ஆனால் நீங்கள் சார்ந்திருக்கும் துறை டஸ்மேனியா மாநில தொழிற்பட்டியலில் இல்லாவிட்டாலும் நீங்கள் கீழ்க்காணும் பிரிவுகளின் கீழ் அங்கு குடியேறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். Skilled Independent Subclass 189 Skilled Nominated Subclass 190 Skilled Regional (Provisional) Subclass 489 உங்களுக்கான sponsor-ஐ வழங்குவதற்கும் டஸ்மேனியா மாநில அரசு தயாராகவுள்ளது. ஆனால் ...

Read More »

இரட்டை குடியுரிமை பெற்ற அவுஸ்ரேலியர்களுக்கு அமெரிக்க பயண தடை இல்லை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் தொடர்பான புதிய உத்தரவினால் இரட்டைக்குடியுரிமை உடைய அவுஸ்ரேலியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு  வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ அவுஸ்ரேலிய கடவுச்சீட்டு கொண்டிருப்பவர்கள் குறித்து வெள்ளை மாளிகையுடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தியதாக அவுஸ்திரேலியாவுக்கான அமெரிக்க தூதுவர் எனக்கு தொலைபேசி மூலம் உத்தரவாதம் அளித்துள்ளார். பிறந்த இடமோ அல்லது இரட்டை குடியுரிமை உடையவர்களாக ...

Read More »