எல்லைக் கதவுகள் மூடப்பட்டே உள்ளதால், அகதிகளுக்கு இடமில்லை என்று அவுஸ்ரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓபாமா ஆட்சியில் அவுஸ்ரேலியா -அமெரிக்கா இடையே அகதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஒருமுறை மட்டும் அமெரிக்காவில் அகதிகளை குடியமர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவுஸ்ரேலியா – அமெரிக்கா இடையே ஏற்பட்ட அகதிகள் மீள்குடியமர்த்தும் ஒப்பந்தம் தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில், அகதிகள் தொடர்பான கொள்கையை மீண்டும் அவுஸ்ரேலியா வெளிப்படுத்தியுள்ளது.