காலநிலை மாற்றம் காரணமாக உருவாகும் எல் நினோவின் தாக்கமானது, இவ்வருடம் 50 சதவீதத்தால் அதிகரிக்குமென, அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
எல்நினோ எனப்படும் காலநிலை தாக்கத்தால், மழை காலத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழிவதுடன், கோடை காலத்தில் அதிகளவான வெப்ப தாக்கம் இருக்குமெனவும், அதனால் அளவுகடந்த வறட்சி, மழை வெள்ளம் ஏற்படுவதற்கு சாதகமாக அமையுமென அவுஸ்ரேலியாவின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் கடந்த காலங்களை விட 2017 ஆம் ஆண்டில் எல் நினோவின் தாக்கம் தொடர்பாக குறித்த வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடந்த 15 நாட்களாக வெப்பம் தொடர்ந்து அதிகரித்துவருவதாகவும், அதனால் எல் நினோவின் தாக்கமானது 6 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஏற்பட்ட எல்நினோ காலநிலை காரணமாக தெற்காசிய பிராந்திய நாடுகள் அதிகளவிலான வெள்ளப்பாதிப்புகளை சந்தித்ததோடு, பசுபிக் பிராந்திய நாடுகள் அதிக வறட்சி காலநிலையை எதிர் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal
