ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை தொழில்நுட்பப் பயிற்சி அளித்தவர் அவுஸ்ரேலியாவில் கைது

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்த நபரை அவுஸ்ரேலிய  காவல் துறை நேற்று (28)  கைது செய்தனர்.

சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், தற்போது ஏவுகணை தொழில் நுட்பத்தில் மிகவும் முன்னேறி வருகின்றனர். இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்ததாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரை அவுஸ்ரேலியா காவல்துறையினர்   நேற்று கைது செய்தனர்.

42 வயதான அந்த நபர், ஏவுகணைகள் கண்டறிவது எப்படி மற்றும் சொந்தமாக ஏவுகணைகள் உருவாக்குவது எப்படி? என ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சொல்லிக் கொடுத்ததாக காவல் துறை குற்றஞ்சாட்டியுள்ளனர்.மேலும், ஏவுகணை தொழில் நுட்பங்கள் குறித்து அந்த மனிதர் ஆராய்ச்சி செய்ததாகவும் காவல்துறை தெரிவித்தனர்.

அவுஸ்ரேலியாவில் இருந்து கடந்தாண்டு 100 பேர் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்ததாக அந்நாட்டு குடியேற்ற அமைச்சர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.