ஆஸ்திரேலியாவிலிருந்து 3000 கிலோ மீட்டர்கள் அப்பால் உள்ள கிறிஸ்துமஸ் தீவு தடுப்பில் பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தை நடத்தப்பட்ட விதம் குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர்களை ஆஸ்திரேலியாவுக்குள் தற்காலிகமாக வாழ அந்நாட்டு அரசு அனுமதியிருக்கிறது. அதே சமயம், அவர்களின் எதிர்காலம் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே உள்ளது எனக் கூறப்படுகின்றது. இந்த சூழலில் தமிழ் அகதி குடும்பத்தை நியூசிலாந்து அல்லது அமெரிக்காவில் மீள்குடியமர்த்துவது குறித்த விவாதங்களும் ஆஸ்திரேலிய அரச மட்டத்தில் நடந்தன. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளை தங்கள் ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
ஆஸ்திரேலிய சமூகத் தடுப்பில் தமிழ் அகதி குடும்பம்
ஆஸ்திரேலிய அரசால் கிறிஸ்துமஸ் தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் தற்போது ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டு சமூகத் தடுப்பில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். சரி, சமூகத் தடுப்பு என்றால் என்ன? ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு விசா பெற காத்திருக்கும் அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் இத்தடுப்பில் வைக்கப்படுகின்றனர். இத்தடுப்பில் சம்பந்தப்பட்ட அகதி தடுப்பு முகாம் அல்லது கடல் கடந்த தடுப்பிற்கு பதிலாக பிற சுதந்திரமான நபர்களைப் போல வீட்டில் அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இதில் அகதிகள் வெளியே சென்று வர அனுமதிக்கப்படுவார்கள், ...
Read More »IS அமைப்புக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் சிட்னி இளைஞர் கைது!
சிட்னியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் IS அமைப்பினருக்கு ஆதரவு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். Chester Hill மற்றும் Sefton ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தீவிரவாத அமைப்பொன்றின் அங்கத்தவராக செயற்பட்டார் என்ற அடிப்படையில் இவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக Australian Federal Police மற்றும் NSW பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞர் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பான பல ஆவணங்களை சேகரித்துவைத்திருந்ததாகவும், வெடிமருந்து செய்முறைகளை வைத்திருந்தார் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களாக இந்த இளைஞர் ...
Read More »வெளிநாட்டவர்களுக்கென புதிய ஆஸ்திரேலிய விசா அறிமுகமாகிறது!
தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பத்து நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் புதிய விவசாய விசாவின்கீழ் ஆஸ்திரேலியா வந்து இங்குள்ள விவசாயிகளிடம் பணிபுரிய முடியும். முன்னதாக பிரிட்டன் நாட்டவர்களை மையப்படுத்தி அறிவிக்கப்பட்ட இப்புதிய விவசாய விசாவில் தற்போது இந்தோனேசியா, மியன்மார், வியட்நாம், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, Brunei மற்றும் Laos ஆகிய 10 நாடுகள் இணைத்துக்கொள்ளப்படுகின்றன. இப்புதிய விசாவை இவ்வருட இறுதிக்குள் நடைமுறைக்கு கொண்டுவர அரசு எதிர்பார்த்துள்ளது. பிரிட்டனிலிருந்து working holiday விசாவில் வருபவர்கள்(backpackers) தமது விசாவை நீட்டிக்க வேண்டுமெனில் ஆஸ்திரேலியாவிலுள்ள விவசாய நிலங்களில் வேலைசெய்யவேண்டுமென்ற நிபந்தனை விலக்கிக்கொள்ளப்படவுள்ளதை அடுத்து ...
Read More »மருத்துவ சேவைக்காக ஆஸ்திரேலிய அரசின் விருது பெறும் தமிழர்!
மருத்துவம் மற்றும் பல்கலாச்சார அமைப்புகளுக்கு ஆற்றிய சேவைகளுக்காக ஆஸ்திரேலிய அரசு வழங்கும் Order of Australia Honours விருதினை வைத்தியர் செல்வேந்திரா செல்வநாயகம் பெற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்து மலேசியாவில் கல்வி கற்று 1974 ஆண்டு அவுஸ்ரேலியாவில் வந்தடைந்தார். 60 ஆண்டுகளாக அவுஸ்ரேலியாவில் வைத்தியராக உள்ளார்.
Read More »கிறிஸ்மஸ் தீவிலிருந்து தமிழ் குடும்பம் விடுதலை!
கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பம் பேர்த்தில் வசிப்பதற்கு அனுமதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு துறை அமைச்சர் அலெக்;ஸ் ஹாக் அறிவித்துள்ளார். பேர்த்தில் அவர்கள் சமூக தடுப்பு முறையின் மூலம் வசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்மானத்தின் மூலம் நான் எல்லைகளை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் உறுதியான கொள்கைகளையும் தடுப்பில் உள்ள சிறுவர்கள் தொடர்பான கருணையையும் சமநிலைப்படுத்தியுள்ளேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்றை தீர்மானம் குடும்பத்தை கிறிஸ்மஸ்தீவு தடுப்பிலிருந்து விடுதலை செய்கின்றது,அவர்கள் தங்கள் கிசிச்சையை முன்னெடுக்க உதவுகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் இன்றைய தீர்மானம் ...
Read More »பிரியா குடும்பத்தை உடனடியாக விடுவிக்குக
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பத்தை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமென ஒன்பது மருத்துவ அமைப்புகள் ஒன்றாக இணைந்து கோரிக்கைவிடுத்துள்ளன. நீண்டகாலம் தடுப்புமுகாமில் வாழ்வது பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கும் பாரதூரமான பாதிப்புகளை உண்டுபண்ணும் என்பதால் இனிமேலும் தாமதிக்காமல் இக்குடும்பம் சமூகத்தில் வாழ அனுமதிக்கப்படவேண்டுமென Royal Australasian College of Physicians (RACP) அமைப்பு உட்பட ஒன்பது அமைப்புகள் கடிதம் மூலம் கோரிக்கைவிடுத்துள்ளன நீண்டகால தடுப்புமுகாம் வாழ்க்கை குழந்தைகள் மற்றும் சிறுவர்களில் அளவிட முடியாத மனநிலை பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இந்நிலை ...
Read More »ஆஸ்திரேலியாவில் எந்த தொழில் செய்வோர் அதிக ஊதியம் பெறுகின்றனர்?
ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் தொழில்களின் பட்டியலை ATO-வரித்திணைக்களம் வெளியிட்டுள்ளது. 2018-19 காலப்பகுதியில் வரித்திணைக்களத்திற்கு வரி செலுத்திய பல்வேறு தொழில்துறை சார்ந்தவர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி நாடு முழுவதும் அதிக வருமானமீட்டுபவர்களில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் முதலிடத்தில் காணப்படுகின்றனர். இரண்டாமிடத்தில் மயக்கவியல் மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் தொழில்களில் முதல் பத்து இடங்களில் என்னென்ன தொழில்கள் இருக்கின்றன என்ற பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. Surgeon – $394,303 Anaesthetist – $386,065 Internal Medicine Specialist – $304,752 Financial ...
Read More »‘அமெரிக்கா அல்லது நியூசிலாந்தில் குடியமர்த்தப்படுவதற்கு பிரியா குடும்பம் தகுதிபெறவில்லை’
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் சட்டப்போராட்டத்தை தொடர்ந்துவரும் பிரியா-நடேஸ் குடும்பம் நியூசிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ குடியமர்த்தப்பட முடியாது என உள்துறை அமைச்சர் Karen Andrews தெரிவித்துள்ளார். அகதிகளுக்கான மீள்குடியேற்ற ஏற்பாடுகளின் கீழ், அகதி ஒருவர் நியூசிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ குடியமர்த்தப்பட வேண்டுமெனில் அவருக்கு அகதி அந்தஸ்து கிடைத்திருக்க வேண்டுமெனவும், பிரியா குடும்பம் அகதிகள் என ஆஸ்திரேலிய அராசால் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் Karen Andrews கூறியுள்ளார். முன்னதாக 2GB-க்கு வழங்கிய நேர்காணலில் பிரியா குடும்பம் தொடர்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் Marise Payne, குறித்த குடும்பத்தை அமெரிக்காவில் அல்லது ...
Read More »வாழ்வதற்கு உகந்த நகரங்கள்: அடிலெய்ட் முன்னிலை! மெல்பன், சிட்னி பின்னடைவு!!
உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை நியூசிலாந்தின் Auckland நகரமும் இரண்டாம் இடத்தை ஜப்பானின் Osaka நகரமும் மூன்றாமிடத்தை தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரமும் பிடித்துள்ளன. தொடர்ந்து பல ஆண்டுகள் முன்னிலையில் இருந்த மெல்பன் தற்போது எட்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. The Economist Intelligence Unit (EIU) உலகிலுள்ள 140 பெரிய நகரங்களின் மருத்துவம், கல்வி, கலாச்சாரம், சுற்றுச்சூழல், உட்கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து 2021ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கோவிட் பரவலை ஒவ்வொரு நகரமும் கையாண்ட விதம் புதிய பட்டியலைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்களித்துள்ளது ...
Read More »