சிட்னியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் IS அமைப்பினருக்கு ஆதரவு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Chester Hill மற்றும் Sefton ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தீவிரவாத அமைப்பொன்றின் அங்கத்தவராக செயற்பட்டார் என்ற அடிப்படையில் இவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக Australian Federal Police மற்றும் NSW பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பான பல ஆவணங்களை சேகரித்துவைத்திருந்ததாகவும், வெடிமருந்து செய்முறைகளை வைத்திருந்தார் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 7 மாதங்களாக இந்த இளைஞர் மீதான விசாரணைகளை Australian Federal Police மற்றும் NSW பொலிஸார் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.
இந்த இளைஞரின் நடவடிக்கைகள் இஸ்லாமிய மத நம்பிக்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் அவரது நடவடிக்கைகள் வெறுப்பையும் தீவிரவாதத்தையும் வெளிப்படுத்தி நிற்பதாகவும் AFP commander Stephen Dametto தெரிவித்தார்.
IS அமைப்பு தொடர்ந்தும் பாரிய அச்சுறுத்தலான ஒன்றாக காணப்படுவதாகவும் ஆஸ்திரேலிய மக்களை இந்த அமைப்பினர் தீவிரவாதத்தைநோக்கி இழுக்க முற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.