வாழ்வதற்கு உகந்த நகரங்கள்: அடிலெய்ட் முன்னிலை! மெல்பன், சிட்னி பின்னடைவு!!

உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை நியூசிலாந்தின் Auckland நகரமும் இரண்டாம் இடத்தை ஜப்பானின் Osaka நகரமும் மூன்றாமிடத்தை தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரமும் பிடித்துள்ளன.

தொடர்ந்து பல ஆண்டுகள் முன்னிலையில் இருந்த மெல்பன் தற்போது எட்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

கோவிட் பரவலை ஒவ்வொரு நகரமும் கையாண்ட விதம் புதிய பட்டியலைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்களித்துள்ளது

Auckland-க்கு 100 க்கு  96 புள்ளிகளும் Osaka-வுக்கு 94.2 புள்ளிகளும் அடிலெய்டுக்கு 94 புள்ளிகளும் கிடைத்துள்ளன.

நான்காவது இடத்தில் நியூசிலாந்தின் Wellington நகரமும் ஜப்பானின் Tokyo நகரமும் இடம்பெற்றுள்ளன.

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரம் ஆறாவது இடத்தையும் குயின்ஸ்லாந்தின் பிரிஸ்பேன் நகரம் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

கோவிட் பரவல் காரணமாக உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் 2020ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் முதலிடத்திலிருந்த ஆஸ்ரியாவின் Vienna நகரம் இவ்வருடம் 12 ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 7 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த மெல்பன் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டிருந்த நிலையில் இவ்வருடம் எட்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு மூன்றாவது இடத்திலிருந்த சிட்னி 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1. Auckland, New Zealand
2. Osaka, Japan
3. Adelaide, Australia
4. Wellington, New Zealand
4. Tokyo, Japan
6. Perth, Australia
7. Zurich, Switzerland
8. Geneva, Switzerland
8. Melbourne, Australia
10. Brisbane, Australia