கிறிஸ்மஸ் தீவிலிருந்து தமிழ் குடும்பம் விடுதலை!

கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பம் பேர்த்தில் வசிப்பதற்கு அனுமதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு துறை அமைச்சர் அலெக்;ஸ் ஹாக் அறிவித்துள்ளார்.

பேர்த்தில் அவர்கள் சமூக தடுப்பு முறையின் மூலம் வசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்மானத்தின் மூலம் நான் எல்லைகளை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் உறுதியான கொள்கைகளையும் தடுப்பில் உள்ள சிறுவர்கள் தொடர்பான கருணையையும் சமநிலைப்படுத்தியுள்ளேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்றை தீர்மானம் குடும்பத்தை கிறிஸ்மஸ்தீவு தடுப்பிலிருந்து விடுதலை செய்கின்றது,அவர்கள் தங்கள் கிசிச்சையை முன்னெடுக்க உதவுகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் இன்றைய தீர்மானம் விசாவிற்கான வழியை உருவாக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்குடும்பத்தினர் தற்காலிக பாதுகாப்பு விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு அனுமதிப்பதற்கான தடையை நீக்குவது குறித்து எதிர்காலத்தில் ஆராய்வேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.