ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் தொழில்களின் பட்டியலை ATO-வரித்திணைக்களம் வெளியிட்டுள்ளது.
2018-19 காலப்பகுதியில் வரித்திணைக்களத்திற்கு வரி செலுத்திய பல்வேறு தொழில்துறை சார்ந்தவர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி நாடு முழுவதும் அதிக வருமானமீட்டுபவர்களில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் முதலிடத்தில் காணப்படுகின்றனர். இரண்டாமிடத்தில் மயக்கவியல் மருத்துவ நிபுணர்கள் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் தொழில்களில் முதல் பத்து இடங்களில் என்னென்ன தொழில்கள் இருக்கின்றன என்ற பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
- Surgeon – $394,303
- Anaesthetist – $386,065
- Internal Medicine Specialist – $304,752
- Financial Dealer – $275,984
- Psychiatrist – $235,558
- Other Medical Practitioners – $222,933
- Judicial or Legal Professionals – $188,798
- Mining Engineer – $184,507
- CEO or Managing Director – $164,896
- Engineering Manager – $159,940
ஆகக்கூடிய சம்பளம் பெறுபவர்களான சத்திரசிகிச்சை நிபுணர்கள் மொத்தமாக 4150 பேர் ஆஸ்திரேலியா முழுவதும் உள்ளனர். மயக்கவியல் மருத்துவ நிபுணர்கள் 3412 பேர் உள்ளனர்.
அதேநேரம் hospitality துறை பணியாளர்களும் தூய்மைப்படுத்தல் பணியாளர்களும் ஆகக்குறைந்த வருமானமீட்டுபவர்களாக காணப்படுகின்றனர்.