அவுஸ்திரேலியமுரசு

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 112 பேருக்கு தொற்று!

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 112 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக தொற்றுக்காண்போர் எண்ணிக்கை அடுத்துவரும் நாட்களில் நூற்றுக்கும் அதிகமாக இருக்கும் என ஏற்கனவே எதிர்வுகூறப்பட்டிருந்த பின்னணியில், ஒரே நாளில் 112 பேருக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜுன் மாதம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவிட் பரவல் ஆரம்பித்ததையடுத்து அங்கு ஒரே நாளில் பதிவான ஆகக்கூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும். வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ...

Read More »

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் டெல்டா வைரஸ்: சிட்னியில் அதிகரிக்கும் தொற்று

ஆஸ்திரேலியாவை கரோனா டெல்டா வைரஸ் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. அதுவும் குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அன்றாட தொற்று வேகமெடுத்து வருகிறது. சிட்னி நகரில் கடந்த இரண்டு வாரங்களாக தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் குறையவில்லை. இதனால் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக அந்நாடு பரிசீலித்து வருகிறது. இது குறித்து, நியூசவுத் வேல்ஸ் மாகாணத் தலைவர் கிளாடிஸ் பெர்ஜிக்லியான் கூறும்போது, “டெல்டா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதன் பரவல்தன்மை அதிகம். ஆகையால் மக்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வது ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் பலி

அவுஸ்திரேலியா மெல்பேன் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் பலியானவர் காலி மஹிந்தா கல்லூரி, மொரட்டுவ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் மாணவரான குஷான் நிரோஷன என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த விபத்து நேற்று மாலை 06.00 மணிக்கு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ள தாக அந்நாட்டு வைத்திய சாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

Read More »

தடுப்பூசி போட்டிருந்தால் ஒரு beer இலவசம்

கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச beer வழங்கப்படும் என்ற மெல்பன் pub ஒன்றின் அறிவிப்பிற்கு பிரதமர் ஆதரவு தெரிவித்துள்ளார். Port Melbourne-இலுள்ள Prince Alfred ஹோட்டலுக்கு அருகில் தடுப்பூசி வழங்கும் மையம் இயங்க ஆரம்பித்ததையடுத்து, கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச beer வழங்கும் செயன்முறையை கடந்த வாரம் குறித்த ஹோட்டல் ஆரம்பித்திருந்தது. ஆனால் மருந்துப்பொருளுடன் தொடர்புடைய சலுகையாக மதுபானத்தை வழங்கமுடியாது என நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டு வாரியமான Therapeutic Goods Administration (TGA) இதற்கு தடைவிதித்தது. TGA-இன் இத்தீர்மானம் நியாயமானது என்றாலும் தற்போதைய சூழலில் ...

Read More »

சிட்னி முடக்கநிலை மேலும் ஒரு வாரத்தால் நீடிக்கப்படுகிறது!

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் 5 பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை மேலும் ஒரு வாரத்தால் நீடிக்கப்படுகிறது. நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை மேலும் ஒரு வாரத்தால் நீடிக்கப்படுவதாக Premier Gladys Berejiklian அறிவித்தார். அங்கு கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 27 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் ...

Read More »

முதியோர் இல்லத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 35 பேருக்கு தொற்று!

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் SummitCare முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வாழ்பவர்கள். நேற்றையதினம் இம்முதியோர் இல்லத்தைச் சேர்ந்த மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதேவேளை குறித்த 35 பேரில் 24 பேர் நோய்த்தொற்றுக்காலம் முழுவதும் தனிமைப்படுத்தலில் இருந்ததாகவும் 11 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இதையடுத்து Bondi பரவல் ஊடாக கோவிட் தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 312 ஆக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து திரும்பிவந்து விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவருக்கும் கோவிட் தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...

Read More »

நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை விட குறைவாகக் கொடுத்தால் தண்டனை!

தொழிலாளர்களுக்கு சரியாகச் சம்பளம் கொடுக்காதவர்களைத் தண்டிக்கும் சட்டம் விக்டோரிய மாநிலத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. அவுஸ்ரேலியாவில்  முதன்முறையாக ஊதியத் திருட்டைக் குற்றமாக்கும் சட்டம் இதுவாகும். தொழிற்சங்கங்களும் அது சார்ந்த தொழில்துறை வழக்குரைஞர்களும், நாட்டில் ஊதியத் திருட்டு பரவலாகக் காணப்படுகிறது என்றும், மற்றைய மானிலங்களும் விக்டோரியாவின் வழியைப் பின்பற்ற வேண்டுமென்று கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

Read More »

ஆஸ்திரேலிய குடியுரிமை விண்ணப்ப கட்டணம் 72 வீதத்தால் அதிகரிப்பு!

ஆஸ்திரேலிய குடியுரிமைக்கான விண்ணப்ப கட்டணம் ஜுலை 1 முதல் 72 வீதத்தினால் அதிகரிக்கிறது .இதுவரைகாலமும் 285 டொலர்களாக இருந்த குடியுரிமை விண்ணப்ப கட்டணம் இனி 490 டொலர்களாக அதிகரிக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை குடிவரவு அமைச்சர் Alex Hawke அண்மையில் வெளியிட்டிருந்தார். கடந்த 2016ம் ஆண்டுக்குப்பின் இவ்வாறு குடியுரிமை விண்ணப்ப கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் Alex Hawke தெரிவித்தார். குடியுரிமைக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பதால் இதற்கேற்ப பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டியுள்ளதாகவும், பல விண்ணப்பங்கள் மிகுந்த சிக்கல்வாய்ந்தவையாக காணப்படுவதால் அவற்றின் பரிசீலனைக்கு அதிக நேரமும் அதிக ...

Read More »

தொண்டு நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

ஆஸ்திரேலிய தொண்டு நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு, தங்களின் செயல்பாடுகளை அரசியல் ரீதியாக முடக்க நினைப்பதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. புதிதாக விதிக்க திட்டமிடப்பட்டுள்ள விதிகளின் படி, தொண்டு நிறுவனங்கள் அத்துமீறல் அல்லது சொத்தை சேதப்படுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் அந்நிறுவனங்கள் வரி விலக்கு நன்கொடையினை பெற முடியாது எனப்படுகின்றது. உதாரணத்திற்கு, தொண்டு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் நடைப்பாதையில் நின்று ஒரு போராட்டத்திற்கு ஆதரவாக பேசினாலோ, ஒரு டீவிட் செய்தாலோ, மெழுகுவர்த்தி ஏந்தினாலோ கூட புதிய விதிகளின் மூலம் ...

Read More »

டெல்டா மாறுபாட்டால் அவுஸ்திரேலியாவில் நெருக்கடி

அவுஸ்திரேலியாவின் கொவிட்-19 தடுப்புக் குழு திங்களன்று அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளது. நாடு முழுவதும் கொவிட்-19 தொற்றின் மிகவும் அபாயகரமான டெல்டா மாறுபாடு வெடிப்பால் சிட்னி உள்ளிட்ட பிற இடங்களில் கட்டுப்பாடுகள் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளினால் ஏறக்குறைய 18 மில்லியன் அவுஸ்திரேலியர்கள் அல்லது 70 சதவீத மக்கள் பாதிப்பினை தற்சமயம் எதிர்கொண்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும், அவுஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்களில் ஐந்தில் ஒரு பகுதியை கொண்ட நகராகவும் இருக்கும் சிட்னி, வார இறுதியில் ...

Read More »