நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை விட குறைவாகக் கொடுத்தால் தண்டனை!

தொழிலாளர்களுக்கு சரியாகச் சம்பளம் கொடுக்காதவர்களைத் தண்டிக்கும் சட்டம் விக்டோரிய மாநிலத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. அவுஸ்ரேலியாவில்  முதன்முறையாக ஊதியத் திருட்டைக் குற்றமாக்கும் சட்டம் இதுவாகும்.

தொழிற்சங்கங்களும் அது சார்ந்த தொழில்துறை வழக்குரைஞர்களும், நாட்டில் ஊதியத் திருட்டு பரவலாகக் காணப்படுகிறது என்றும், மற்றைய மானிலங்களும் விக்டோரியாவின் வழியைப் பின்பற்ற வேண்டுமென்று கோரிக்கை முன் வைத்துள்ளனர்.