ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த பாகிஸ்தான் அணி அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடர் உலக சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 60 புள்ளிகள் வழங்கப்படும். இந்த தொடரில் இருந்து ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு காரணமானவர் கைது!
கஞ்சா செடிகளை பாதுகாக்க புதர்களுக்கு தீவைத்து ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு காரணமானவரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. வனப்பகுதி மட்டும் இன்றி புதர் மண்டிய பகுதிகளிலும் தீ பற்றி எரிகிறது. வறண்ட வானிலை காரணமாக தீ கட்டுக்குள் அடங்காமல் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுதீயில் இதுவரை 4 பேர் பலியாகி இருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 10 ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகமான வனப்பகுதி ...
Read More »அகதிகள் – தஞ்சக்கோரிக்கையாளர்கள் இடையே கடுமையான மனநல நெருக்கடி!
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம் செயல்படும் பப்பு நியூ கினியாவுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய பாதிரியார் அங்குள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். “பப்பு நியூ கினியாவில் உள்ள தஞ்சக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு இருக்கும் நிலையற்ற சூழல் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர்களில் சிலரை சந்தித்த பிறகு தான்ன், அவர்கள் மனிதத்தன்மையற்ற நிலைமைகளுக்குள் வாழ்வதை உணர்ந்து கொண்டேன்,” எனக் கூறியுள்ளார். வின்செண்ட் வான் லாங் என்னும் அப்பாதிரியார் குழந்தையாக இருந்த பொழுது ஆஸ்திரேலியாவில் அகதியாக தஞ்சமடைந்தவர். ஆஸ்திரேலியாவிலிருந்து 7 பேர் கொண்ட குழுவுடன் ...
Read More »ஆஸ்திரேலிய சிறையை விட ஈரானே மேலானது !
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர், ஆஸ்திரேலியாவில் புதிய வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆறு ஆண்டுகளாக மனுஸ்தீவு தடுப்பு முகாமில் சிறைப்பட்டு இருந்துள்ளார். பப்பு நியூ கினியா என்ற தீவு நாட்டில் உள்ள மனுஸ்தீவு முகாம் அண்மையில் மூடப்பட்டு, தலைநகர் Port Moresby அருகே Bomana குடிவரவுத் தடுப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நிதி உதவியுடன் கட்டியெழுப்பப்பட்டது இம்மையம். கடந்த 9 வாரங்களாக இத்தடுப்பு மையத்தில் மோசமான சிறை வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் மீண்டும் ஈரானுக்கு செல்லவே ஒப்புக்கொண்டுள்ளார். இங்குள்ள ...
Read More »ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ; மூன்று வாரங்கள் நீடிக்கலாம்!
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ இன்னும் மூன்று வாரங்கள் நீடிக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ குறித்து ஊடகங்கள், “ ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பயங்கரமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. சுமார் 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீயால் நாசமாகியுள்ளன. 2.5 மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்கள் தீக்கு இரையாகின. காட்டுத் தீ ஏற்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. காட்டுத் தீ காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குவின்ஸ்லாண்ட் ...
Read More »அகதியின் உடலை திருப்பி அனுப்ப உதவ மறுக்கும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட ஆப்கானிஸ்தான் அகதியின் உடலை ஆப்கானிஸ்தானில் உள்ள அவரது குடும்பத்திடம் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு 15,000 டாலர்களை கேட்டுள்ளது. சயத் மிர்வாஸ் ரோஹனி என்ற 32 வயது அகதி, கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பத்தில் சிக்கல் நீடித்து வருகின்றது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மருத்துவராக பணியாற்றிய இவர், ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த நிலையில் மனுஸ்தீவில் நான்கு ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் மனநல பாதிப்பை எதிர்கொண்ட நிலையில, மேலதிக சிகிச்சைகாக ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டிருந்தார். ...
Read More »ஆஸ்திரேலியா காட்டுத்தீ அணைக்கும் பணியில் கர்பிணிப்பெண்!
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சில் 13 வாரம் கர்ப்பமாக உள்ள தீயணைப்பாளர் ஒருவர் பணியாற்றுகிறார். 23 வயது ஆனா கேட் ராபின்சன்-வில்லியம்ஸ் எனும் தீயணைப்பாளர் ஆடையுடன் Instagramஇல் தம் படத்தைப் பதிவுசெய்திருந்தார். தம் நாட்டை நேசிப்பதாகவும், தீயை அணைக்க தமது நண்பர்கள் போராடி வரும்போது தாம் மட்டும் எதுவும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார். 13 வாரச் சிசுவின் sonogram படத்தையும் அவர் பதிவேற்றம் செய்தார். சரியான பாதுகாப்பு ஆடைகளை அணிந்து, மருத்துவரின் ஒப்புதலுடன் ...
Read More »ஆஸ்திரேலியாவில் 12க்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன!
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக பயங்கரமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயை அணைக்க அதிகாரிகள் போராடி வருகின்றனர். காட்டுத் தீ காரணமாக இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். சுமார் 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீயால் நாசமாகியுள்ளன. தொடர்ந்து காட்டுத் தீ ஏற்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. காட்டுத் தீ காரணமாக நியூ ...
Read More »அவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு!
அவுஸ்திரேலியா நாட்டின் பரவும் காட்டுத்தீவு காரணமாக பேரழிவு அச்சுறுத்தல் தொடர்பாக அவசரகால சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா நாட்டின் கிழக்கில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் காட்டுத் தீ பேரழிவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் மூன்று நாட்களில் மோசமான காட்டுத்தீ காரணமாக குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால் அவுஸ்திரேலியா நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று மிக மோசமான தாக்கம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு மாநிலங்களிலும் 120 க்கும் மேற்பட்ட பற்றை தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் ...
Read More »அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ; மூவர் பலி!
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயீன்ஸ்லாந்து பிராந்தியங்களில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி குறைந்தது 3 பேர் பலியானதுடன் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். மேற்படி பிராந்தியங்களில் 100 க்கு மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிஸன் இரு மாநிலங்களிலும்இந்தத் தீயை அணைக்க போராடிவரும் சுமார் 1,300 தீயணைப்புப் படைவீரர்களுக்கு உதவ இராணுவத்தினரின் உதவியை நாடியுள்ளார். அவர் இந்தக் காட்டுத் தீ அனர்த்தத்தில் ...
Read More »