ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சில் 13 வாரம் கர்ப்பமாக உள்ள தீயணைப்பாளர் ஒருவர் பணியாற்றுகிறார்.
23 வயது ஆனா கேட் ராபின்சன்-வில்லியம்ஸ் எனும் தீயணைப்பாளர் ஆடையுடன் Instagramஇல் தம் படத்தைப் பதிவுசெய்திருந்தார்.
தம் நாட்டை நேசிப்பதாகவும், தீயை அணைக்க தமது நண்பர்கள் போராடி வரும்போது தாம் மட்டும் எதுவும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார்.
13 வாரச் சிசுவின் sonogram படத்தையும் அவர் பதிவேற்றம் செய்தார். சரியான பாதுகாப்பு ஆடைகளை அணிந்து, மருத்துவரின் ஒப்புதலுடன் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டதாக BBC செய்தி நிறுவனத்திடம் கூறினார் அவர்.
இதேவேளை 1995இல், தம் தாயாரும் கர்ப்பமாக இருந்தபோது தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்டதாகக் கூறினார்.
சுமார் 2.5 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பை அழித்துள்ள காட்டுத் தீ, அதிக வறட்சியின் காரணமாக பரவிவருவது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal