அவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு!

அவுஸ்திரேலியா நாட்டின்  பரவும் காட்டுத்தீவு காரணமாக பேரழிவு அச்சுறுத்தல் தொடர்பாக அவசரகால சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா நாட்டின்  கிழக்கில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் காட்டுத் தீ பேரழிவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் மூன்று நாட்களில் மோசமான காட்டுத்தீ காரணமாக குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஆனால் அவுஸ்திரேலியா நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று மிக மோசமான தாக்கம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரு மாநிலங்களிலும் 120 க்கும் மேற்பட்ட பற்றை தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தீப்பிழம்புகள் 970,000 ஹெக்டேர் நிலத்தை எரித்து 150 வீடுகளை அழித்துள்ளன. குயின்ஸ்லாந்தில் ஒன்பது வீடுகள் சேதமடைந்துள்ளது.

மேலும் இன்று செவ்வாய்க்கிழமை வெப்பநிலை 37 செல்சியஸை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு அவுஸ்திரேலியா வழியாக அனல் காற்று தொடங்கியதால் கடந்த வெள்ளிக்கிழமையை விட நிலைமைகள் மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.