ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ இன்னும் மூன்று வாரங்கள் நீடிக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ குறித்து ஊடகங்கள், “ ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பயங்கரமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. சுமார் 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீயால் நாசமாகியுள்ளன. 2.5 மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்கள் தீக்கு இரையாகின. காட்டுத் தீ ஏற்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.
காட்டுத் தீ காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குவின்ஸ்லாண்ட் ஆகிய மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் காட்டுத் தீ காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
மூன்று வாரங்களாக காட்டுத் தீயை அணைக்க ஆஸ்திரேலியா தடுமாறி வருவதால் கடுமையான விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் இன்னும் மூன்று வாரங்கள் காட்டுத் தீ நீடிக்கலாம் என்றும் இவ்வாண்டின் இறுதியில் 25% சதவீதம் மட்டுமே மழைப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை விளக்கும் படங்கள்