அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயீன்ஸ்லாந்து பிராந்தியங்களில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி குறைந்தது 3 பேர் பலியானதுடன் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேற்படி பிராந்தியங்களில் 100 க்கு மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிஸன் இரு மாநிலங்களிலும்இந்தத் தீயை அணைக்க போராடிவரும் சுமார் 1,300 தீயணைப்புப் படைவீரர்களுக்கு உதவ இராணுவத்தினரின் உதவியை நாடியுள்ளார். அவர் இந்தக் காட்டுத் தீ அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் மேற்படி தீயணைப்பு செயற்கிரமத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் தொண்டு அடிப்படையில் தாமாக முன்வந்து பங் கேற்றள்ளனர். இந்தக் காட்டுத் தீயில் சிக்கி நியூ சவுத் வேல்ஸில் மட் டும் 150 க்கு மேற்பட்ட வீடுகள் அழிவடைந்துள்ளன. கடுமையான வறட்சியான காலநிலை நிலவுவதால் காட்டுத் தீ மேலும் வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.