அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலியாவுக்கும் பரவிய கொரோனா வைரஸ்: 78 வயது முதியவர் பலி!

சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 78 வயது முதியவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 80 ஆயிரம் பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்கம் ...

Read More »

ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட மலேசியர்கள்!

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக பணியாற்ற முயன்ற 5 மலேசியர்களை பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய எல்லைப்படை தடுத்து நிறுத்தியுள்ளது. 5 பேர் கொண்ட இக்கூட்டத்தை வழிநடத்தியதாக ஒப்புக்கொண்ட 34வயதுடைய மலேசியருக்கும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 27ம் திகதி இவர்கள் அனைவரும் சுற்றுலா விசாக்கள் மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் செல்ல முயன்றதாகக் கூறப்படுகின்றது. முதலில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் விசாரித்த பொழுது, 5 மலேசியர்களையும் தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எனக் கூறியுள்ளார் இந்நபர். பிறகு நபர் ஒருவருக்கு 500 மலேசிய ரிங்கட்களை(180 ...

Read More »

நன்கொடையாக கிடைத்த பணத்தை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கும் ஆஸ்திரேலிய சிறுவன் குவாடன்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தனக்கு கிடைத்த 4 லட்சத்து 75 ஆயிரம் டாலர் நன்கொடையை தொண்டு நிறுவனத்துக்கு வழங்க போவதாக அவனது தாய் தெரிவித்துள்ளார். குள்ளத்தன்மையால் கேலி கிண்டலுக்கு உள்ளான சிறுவன் குவாடன் பேல்ஸ், மனமுடைந்து தனது தாயிடம் தற்கொலை செய்யப்போவதாக கதறி அழும் வீடியோ உலகையே உலுக்கியது. அவனுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் லட்சக்கணக்கானோர் கருத்து பதிவிட்ட நிலையில் அமெரிக்க நடிகர் ப்ராட் வில்லியம்ஸ் உருவாக்கிய பக்கத்தின் மூலம் இந்திய மதிப்பில் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் நன்கொடை ...

Read More »

வங்காளதேசத்தை 86 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

கான்பெர்ராவில் நடைபெற்ற ஆட்டத்தில் 189 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா, வங்காளதேசத்தை 103 ரன்னில் கட்டுப்படுத்தி அபார வெற்றி பெற்றது. பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கான்பெர்ராவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி, பெத் மூனே ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் வங்காளதேச வீராங்கனைகளின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அலிசா ஹீலி 53 பந்தில் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பெத் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதியின் நாவல் திரைப்படமாக…..!

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த குர்து அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானியின் ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ எனும் நாவல் விரைவில் திரைப்படமாக உருவெடுக்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பை Sweetshop & Green, Aurora Films மற்றும் Hoodlum Entertainment எனும் தயாரிப்பு நிறுவனங்கள் தனது கூட்டறிக்கையில் வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த நிலையில் சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியாவில் உள்ள மனுஸ்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு ...

Read More »

சிட்னியில் புகையிரதத்திலிருந்து பெட்டிகளிற்கு கீழே விழுந்த கைக்குழந்தை…!

சிட்னியின் வூலி கிறீக் புகையிரத நிலையத்தில் புகையிரதத்திலிருந்து விழுந்த நிலையில் புகையிரதத்தின் அடியில் சிக்குண்ட கைக்குழந்தையை மூவர் துணிச்சலுடன் மீட்ட சம்பவம் பலரின் மனதை தொட்டுள்ளது. இன்று காலை வூலி கிறீக் புகையிரத நிலையத்தில் புகையிரதத்திலிருந்து கைக்குழந்தையொன்று விழுந்துள்ளது. என்ன செய்வது என தெரியாமல் தாயார் தவித்தவேளை மூவர் புகையிரதம் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்குள் குவித்து பெட்டிகளின் கீழே சிக்குண்டிருந்த குழந்தையை தேட ஆரம்பித்துள்ளனர். ஏனைய பயணிகள் தாய்க்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தவேளை குழந்தைமீட்கப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் குழந்தையை மீட்டுவிட்டனர் என பயணியொருவர் தெரிவிப்பதை காண்பிக்கும் ...

Read More »

ஆஸ்திரேலியாவிற்கு விசா மறுப்பு!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க செல்லவிருந் போட்ஸ்வானா நாட்டின் இளம் கிரிக்கெட் வீராங்கனையான ஷமீலா மோஸ்வியூக்கு விசா மறுக்கப்பட்டுள்ளமை பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இவருக்கு ஆஸ்திரேலிய விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. “நீங்கள் ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக தங்க நினைக்கிறீர்கள் என்பதில் எமக்கு திருப்தி இல்லை” என விசா மறுக்கப்பட்டுள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. FairBreak எனும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் அமைப்பு அணியின் சார்பாக அவர் விளையாட இருந்த நிலையில் ஷமீலாவுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. “ஷமீலா இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் ...

Read More »

கேலி கிண்டலுக்குள்ளான சிறுவன் : அவுஸ்திரேலிய ரக்பி அணியினருடன் கம்பீரமாக மைதானத்தில் வரவேற்பு!

அவுஸ்திரேலியாவில் பாடசாலை ஒன்றில் மாணவர்களால் கேலி கிண்டலுக்குள்ளான குவாடன் பெல்ஸின் மனதை உருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலானதை அடுத்து உலக நாடுகளில் அச் சிறுவனுக்கு ஆதரவாக குரல் எழுப்பட்டு வருகிறது. வளர்ச்சியின்மை காரணமாக குறித்த சிறுவன் பாடசாலையில் எதிர்கொண்ட துன்பங்களை தனது தாயிடம் தெரிவித்து, தான் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு ;தெரிவித்ததை அவரது தாய் காணொளி ஒன்றை எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து சிறுவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் பிரபலங்கள் உள்பட விளையாட்டு ...

Read More »

கொரோனோ : கண்காணிப்பிற்கு பிறகு வீடு திரும்பிய 200 ஆஸ்திரேலியர்கள்!

கொரோனோ வைரஸ் தாக்கம் பெருமளவில் உள்ள சீனாவின் Hubei மாகாணத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள், 14 நாட்கள் கண்காணிப்பில் கிறிஸ்துமஸ் தீவில் வைக்கப்படிருந்தனர். இக்கண்காணிப்பில் அவர்களிடையே வைரஸ் தொற்று எதுவும் கண்டறியப்படாத நிலையில், இவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் உள்ள தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆஸ்திரேலியாவின் பெரும் நிலப்பரப்பிலிருந்து சுமார் 3000 கி.மீ. அப்பால் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் தீவு, ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான தீவாகும். சீனாவில் ஏற்பட்ட கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 1 முதல் ...

Read More »

தீ மூட்டப்பட்ட காரிலிருந்து மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயும் பலி!

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்னில் கணவர் காருக்கு தீ மூட்டிய சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயும் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ள அதேவேளை தனது மகளிற்கும் முன்னாள் ரக்பி வீரரான கணவரிற்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டிருந்ததாக உயிரிழந்துள்ள பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ரக்பி வீரர் ரொவான் பக்ஸ்டர் தனது குடும்பத்தவர்களை காருடன் தீமூட்டி எரித்தவேளை காயங்களுடன் மீட்கப்பட்ட ஹனா பக்ஸ்டெர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். ரொவான் பக்ஸ்டரும் மூன்று பிள்ளைகளும் நேற்று உயிரிழந்த நிலையில் இன்று ஹனா ;பக்ஸ்டர் ;காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த ...

Read More »