ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தனக்கு கிடைத்த 4 லட்சத்து 75 ஆயிரம் டாலர் நன்கொடையை தொண்டு நிறுவனத்துக்கு வழங்க போவதாக அவனது தாய் தெரிவித்துள்ளார். குள்ளத்தன்மையால் கேலி கிண்டலுக்கு உள்ளான சிறுவன் குவாடன் பேல்ஸ், மனமுடைந்து தனது தாயிடம் தற்கொலை செய்யப்போவதாக கதறி அழும் வீடியோ உலகையே உலுக்கியது.
அவனுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் லட்சக்கணக்கானோர் கருத்து பதிவிட்ட நிலையில் அமெரிக்க நடிகர் ப்ராட் வில்லியம்ஸ் உருவாக்கிய பக்கத்தின் மூலம் இந்திய மதிப்பில் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் நன்கொடை வசூலிக்கப்பட்டது. குவாடனையும் அவனது தாயையும் டிஸ்னிலாண்ட் அனுப்ப திரப்பட்ட இந்த நிதியை பணத்தின் தேவை அதிகம் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாக அவரது தாய் யார்ராகா அறிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal