கொரோனோ வைரஸ் தாக்கம் பெருமளவில் உள்ள சீனாவின் Hubei மாகாணத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள், 14 நாட்கள் கண்காணிப்பில் கிறிஸ்துமஸ் தீவில் வைக்கப்படிருந்தனர்.
இக்கண்காணிப்பில் அவர்களிடையே வைரஸ் தொற்று எதுவும் கண்டறியப்படாத நிலையில், இவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் உள்ள தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவின் பெரும் நிலப்பரப்பிலிருந்து சுமார் 3000 கி.மீ. அப்பால் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் தீவு, ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான தீவாகும்.
சீனாவில் ஏற்பட்ட கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 1 முதல் சீனர்களுக்கும் சீனா வழியாக பயணிப்பவர்களுக்கும் ஆஸ்திரேலியாவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது.
சீனா எனும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1771 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் பெரும்பாலான மரணங்கள் Hubei மாகாணத்தில் நிகழ்ந்தவையாகும்.