தீ மூட்டப்பட்ட காரிலிருந்து மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயும் பலி!

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்னில் கணவர் காருக்கு தீ மூட்டிய சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயும் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ள அதேவேளை தனது மகளிற்கும் முன்னாள் ரக்பி வீரரான கணவரிற்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டிருந்ததாக உயிரிழந்துள்ள பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ரக்பி வீரர் ரொவான் பக்ஸ்டர் தனது குடும்பத்தவர்களை காருடன் தீமூட்டி எரித்தவேளை காயங்களுடன் மீட்கப்பட்ட ஹனா பக்ஸ்டெர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

ரொவான் பக்ஸ்டரும் மூன்று பிள்ளைகளும் நேற்று உயிரிழந்த நிலையில் இன்று ஹனா ;பக்ஸ்டர் ;காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் தனது மகளிற்கும் அவரது கணவரிற்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டிருந்தது என தெரிவித்துள்ள ஹனாவின் தந்தை லொயிட் கிளார்க் தங்கள் மகளை அந்த உறவிலிருந்து விடுவிப்பதற்காக போராடி களைத்துப்போனோம்& என தெரிவித்துள்ளார்.

தனது மகளின் கணவரை கொடுமையானவன் என வர்ணித்துள்ள லொயிட் கிளார்க் அவர் தனது பிள்ளைகளை நேசிப்பதாக தெரிவித்து வந்தார் ஆனால் அது பொய் என்பது எனக்கு தெரியும் என சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.

அவன் நரகத்தில் அழுகட்டும் எனவும் அவர் பதிவு செய்துள்ளார். ஹனாவின் சகோதரர் உட்பட பல உறவினர்கள் முன்னாள் ரக்பி வீரரை ஈவிரக்கமற்ற அரக்கன் என சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர்.

எனது சகோதரிகளும்; குழந்தைகளும் எவ்வளவு இனிமையானவர் என்பது அவர்களுடன் பழகிய அனைவருக்கும் தெரியும் என சகோதரர் சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார்.

இந்த வருடம் சிறந்த வருடமாக அமையும் என எனது மனைவியுடன் எனது சகோதரி தெரிவித்திருந்தார் என ஹனாவின் சகோதரர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பக்ஸ்டர் தம்பதியினர் உடற்பயிற்சி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர் எனவும் எனினும் கடந்த கிறிஸ்மஸிற்கு பின்னர் நீதிமன்றம் செல்லாமல் இருவரும் பிரிந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரோவன் பக்ஸ்டெர் முன்னாள் ரக்பி எனவும் அவரது மனைவி டிராம்பொலினிங் வீராங்கனை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் கடந்த சில மாதங்களாக அவர் தனது பிள்ளைகளை தான் எவ்வாறு நேசிக்கின்றேன் என்பதை பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தற்கொலை கொலை முயற்சியா என்பதை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கார் தீப்பற்றி எரிவதற்கு முன்னர் பாரிய வெடிப்புசத்தங்கள் கேட்டதாக சம்பவம் இடம்பெற்ற இடத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரிய வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் கடும் சீற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ள பிரதமர் ஸ்கொட்மொறிசன் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் உதவிகளை கோரவேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை பொதுமக்கள் அவுஸ்திரேலியா குடும்ப வன்முறைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளனர்.