ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க செல்லவிருந் போட்ஸ்வானா நாட்டின் இளம் கிரிக்கெட் வீராங்கனையான ஷமீலா மோஸ்வியூக்கு விசா மறுக்கப்பட்டுள்ளமை பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இவருக்கு ஆஸ்திரேலிய விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
“நீங்கள் ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக தங்க நினைக்கிறீர்கள் என்பதில் எமக்கு திருப்தி இல்லை” என விசா மறுக்கப்பட்டுள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
FairBreak எனும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் அமைப்பு அணியின் சார்பாக அவர் விளையாட இருந்த நிலையில் ஷமீலாவுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
“ஷமீலா இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் ஒரு மாணவி. போட்ஸ்வானா அரசும் விளையாட்டு ஆணையமும் இங்கிலாந்தில் அவர் கல்வி கற்க உதவியுள்ள நிலையில் அவரை ஆஸ்திரேலிய பாதுகாப்புக்கு ஆபத்தானவர் எனக் கருதவது அபத்தமாகும்,” எனக் கூறியுள்ளார் FairBreak அமைப்பின் நிறுவனர் ஷயுன் மார்ட்டின்.
Eelamurasu Australia Online News Portal
