சிட்னியின் வூலி கிறீக் புகையிரத நிலையத்தில் புகையிரதத்திலிருந்து விழுந்த நிலையில் புகையிரதத்தின் அடியில் சிக்குண்ட கைக்குழந்தையை மூவர் துணிச்சலுடன் மீட்ட சம்பவம் பலரின் மனதை தொட்டுள்ளது.
இன்று காலை வூலி கிறீக் புகையிரத நிலையத்தில் புகையிரதத்திலிருந்து கைக்குழந்தையொன்று விழுந்துள்ளது.
என்ன செய்வது என தெரியாமல் தாயார் தவித்தவேளை மூவர் புகையிரதம் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்குள் குவித்து பெட்டிகளின் கீழே சிக்குண்டிருந்த குழந்தையை தேட ஆரம்பித்துள்ளனர்.
ஏனைய பயணிகள் தாய்க்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தவேளை குழந்தைமீட்கப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் குழந்தையை மீட்டுவிட்டனர் என பயணியொருவர் தெரிவிப்பதை காண்பிக்கும் காணொளி வெளியாகியுள்ளது.
குழந்தையை கண்டுபிடித்த நபர் தாயிடம் குழந்தையை கையளித்து குழந்தை நன்றாகயிருக்கின்றது என்பதை தெரிவிக்கும் காணொளி வெளியாகியுள்ளது.
சிட்னியின் புகையிரத நிலைய ஊழியர்கள் குழந்தையை மீட்டவர்களிற்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.எனது மகள் புகையிரதத்தில் பயணம் செய்தது இதுவே முதல் தடவை இனி சிறிது காலத்திற்கு அவர் புகையிரதத்தில் பயணம் செய்யமாட்டார் என தாயார் தெரிவித்துள்ளார்.
தாயர் நடுங்கியபடி மக்கள் புகையிரதத்தின் கீழ் விழுந்துவிட்டாள் ஈ புகையிரதத்தை நிறுத்துங்கள் என கதறிக்கொண்டிருந்தார், மக்கள் புகையிரதத்தை நிறுத்துமாறு சத்தமிட்டனர், அது ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்தது,அனைத்தும் ஒரு சில நிமிடங்கள் நடந்தன என சம்பவத்தை பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.