அவுஸ்திரேலியமுரசு

நான் நாடாளுமன்றத்திற்கு தகுதியானவர் இல்லை!- அவுஸ்ரேலிய துணைப் பிரதமர்

இரட்டை குடியுரிமை கொண்டிருப்பதால் தான் நாடாளுமன்றத்திற்கு தகுதியானவர் இல்லை என அவுஸ்ரேலிய துணைப் பிரதமர் பர்னாபி ஜோய்ஸ் (Barnaby Joyce) தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவிலும் நியூசிலாந்திலும் இரட்டைக்குடியுரிமை கொண்டவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. அவுஸ்திரேலிய துணைப் பிரதமரின் இந்த அறிவிப்பால் ஆளும் கன்சர்வேடிவ் ஆட்சியை நிலைகுலைய செய்யும் என எதிர்வு கூறப்படுகிறது. அத்துடன் அவர் பதவி விலகினால், அரசு பெரும்பான்மையை இழக்க நேரிடலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஜோய்ஸின் தாயார் அவுஸ்திரேலிய பிரஜை. அவரது தந்தை நியூசிலாந்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கடந்த 1947ஆம் ...

Read More »

சிட்னியில் “கலைமாமணி” தேச மங்கையர்க்கரசி!

சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் இனிய இலக்கிய சந்திப்பு எதிர்வரும் 19ம் திகதி Redgum Function Centre, 2 Lane Street, Wentworthville எனும் முகவரியில் பிற்பகல் 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பிரபல சொற்பொழிவாளர் திருமதி தேச மங்கையர்க்கரசி பங்கேற்கவுள்ளார்.

Read More »

குரோஷிய ஜனாதிபதி அவுஸ்ரேலியா விஜயம்!

அவுஸ்ரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை குரோஷிய ஜனாதிபதி கொலின்டா கிராபர் கிராரோவிக், முதற் தடவையாக மேற்கொண்டுள்ளார். அவுஸ்திரேலிய ஜனாதிபதியை குரோஷிய ஜனாதிபதி கொலின்டா, சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகிறது. மேலும், அவர் தனது விஜயத்தின் ஒருபகுதியாக நேற்று ( 13,ஞாயிற்றுக்கிழமை) சிட்னியிலுள்ள தேவாலயமொன்றுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.  

Read More »

அவுஸ்திரேலியாவின் பிரதிப்பிரதமர் இரட்டை பிரஜாவுரிமைக்குரியவர் !

அவுஸ்திரேலியாவின் பிரதிப்பிரதமர்  பார்னபி ஜொய்ஸ் இரட்டை பிரஜாவுரிமைக்குரியவர் என்பதை நியுசிலாந்து உறுதிசெய்துள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலிய அரசியலில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது நியுசிலாந்தின் உள்துறை அமைச்சரின் அலுவலகம் நியுசிலாந்து பிரஜையொருவரிற்கு பிறந்த குழந்தைக்கு  நியுசிலாந்து பிரஜாவுரிமை வழங்கப்படுவது வழமை என தெரிவித்துள்ளதை தொடர்ந்தே இந்த சர்ச்சை உருவாகியுள்ளது. இதனை உறுதிசெய்துள்ள நியுசிலாந்து பிரதமரும் அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் ஓரு நியுசிலாந்து பிரஜை என   தெரிவித்துள்ளார். எனினும் தான் அவுஸ்திரேலிய சட்டத்தை மீறவில்லை என தனக்கு சட்டத்துறையினர்  ஆலோசனை வழங்கியுள்ளனர் எனவும் தான் தொடர்ந்தும் பிரதிபிரதமராக பதவி ...

Read More »

அவுஸ்ரேலியா நாட்டினரை அசரவைத்த ஐஸ்வர்யா ராயின் மகள்!

பாலிவுட் ஸ்டார் ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக இருந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். சில இடைவெளி விட்டு ஏக் தில் ஹாய் முஷ்கில் படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இவர் நடிகர் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரத்யா என்ற பெண் குழந்தை இருக்கிறார். இந்திய திரைப்பட விழா  மெல்போர்ன் நகரில் நடந்தது. இதில் ஐஸ்வர்யா தன் மகளுடன் கலந்து கொண்டார். அதில் ஆரத்யா இந்திய தேசியகீதத்தை பாடி அசத்தினார். இதை பலரும் பாராட்டினர். இருவரும் தேசிய கொடியை ...

Read More »

அவுஸ்ரேலியாவில் விமான விபத்து!

அவுஸ்ரேலியாவில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கலோந்திரா விமான நிலையத்திலேயே நேற்று ( 12-சனிக்கிழமை) இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. இந்த விமானம் தரையிறங்க முற்பட்ட வேளையில், ஓடு பாதையில் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விமான விபத்தில் விமானி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இந்த விமானத்தில் பயணித்த நான்கு பயணிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளனர்.

Read More »

அமெரிக்காவுக்கு உதவத் தயார் : அவுஸ்ரேலியா

வடகொரியா அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுக்கு உதவ முன்வரப் போவதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்சுடன் பேசியபோது, அவுஸ்ரேலியப் பிரதமர் மெல்கோம் டர்ன்புல் (Malcolm Turnbull) அவ்வாறு கூறினார். பொருளியல் தடைகளை விதிப்பதே, வடகொரியாவைக் கையாள்வதற்கான மேலும் சிறப்பான வழி என்றார்  டர்ன்புல். ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றம் கடந்த சனிக்கிழமை, வடகொரியாவுக்கு எதிரான மேலும் சில கடுமையான தடைகளுக்கு ஒப்புதல் அளித்தது. அந்தத் தடைகளால், வடகொரியா ஆண்டுக்குச் சுமார் ஒரு பில்லியன் டாலர் இழப்பைச் சந்திக்க ...

Read More »

அவுஸ்ரேலியாவின் ‘தங்கப் பெண்’ காலமானார்!

அவுஸ்ரேலியாவின் ‘தங்கப் பெண்’ எனப் போற்றப்படும் தடகள வீராங்கனையும், நான்கு முறை ஒலிம்பிக் சம்பியன் பட்டம் வென்றவருமான பெட்டி குத்பேர்ட் (Betty Cuthbert) தனது 79வது வயதில் காலமானார். கடந்த ஐந்தாண்டு காலமாக தண்டுவட மரப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்ததாக அவுஸ்ரேலிய தடகள அமைப்பு அறிவித்துள்ளது. இவர் 1956 ஆம் ஆண்டு மெல்பேர்னில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் போட்டிகளில் இரு தங்கப் பதக்கங்களை வென்றார். தொடர்ந்து 8 வருட ஓய்வின் பின்னர் ...

Read More »

அவுஸ்ரேலிய அணியின் பீ்ல்டிங் பயிற்சியாளராக பிராட் ஹாடின் நியமனம்

அவுஸ்ரேலிய சீனியர் கிரிக்கெட் அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய சீனியர் கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளரான முன்னாள் பேட்ஸ்மேன்- மீடியம் பந்து வீச்சாளரான கிரேக் ப்ளிவெட் இருந்து வந்தார். இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த கிரிக்கெட் சங்கமான தெற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கத்தில் பணிபுரிவதற்காக தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இதனால் பிராட் ஹாடின் புதிய பீல்டிங் பயிற்சியாளரான நியமிக்கப்பட்டுள்ளார். ஹாடின் 2019-ம் ஆண்டு வரை இந்த பதவியை விகிப்பார். பிராட் ...

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் விலைபோய்விட்டது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை ஒரு நாடு இரு தேசமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை வடக்குக் கிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சி. இதனைத் தான் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறி வந்தார்கள். ஆனால் தேர்தலின் பின்னர் அவர்கள் ஒற்றையாட்சி, 13ஆவது திருத்தச் சட்டமென்று அரசாங்கம் ...

Read More »