அவுஸ்ரேலியாவின் ‘தங்கப் பெண்’ எனப் போற்றப்படும் தடகள வீராங்கனையும், நான்கு முறை ஒலிம்பிக் சம்பியன் பட்டம் வென்றவருமான பெட்டி குத்பேர்ட் (Betty Cuthbert) தனது 79வது வயதில் காலமானார்.
கடந்த ஐந்தாண்டு காலமாக தண்டுவட மரப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்ததாக அவுஸ்ரேலிய தடகள அமைப்பு அறிவித்துள்ளது.
இவர் 1956 ஆம் ஆண்டு மெல்பேர்னில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் போட்டிகளில் இரு தங்கப் பதக்கங்களை வென்றார்.
தொடர்ந்து 8 வருட ஓய்வின் பின்னர் டோக்கியோவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி தங்கம் வென்றார்.
இவ்வாறு குதிரைபோல் ஓயாது ஓடிக் கொண்டிருந்த குத்பேர்ட், கடந்த 1969ஆம் ஆண்டு தண்டுவட மரப்பு நோயினால் பாதிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து அவர் தனது வாழ்நாளை பெரும்பாலும் சக்கர நாற்காலியிலேயே கழித்திருந்தார் என்பது துன்பியலே.