தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை ஒரு நாடு இரு தேசமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை வடக்குக் கிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சி. இதனைத் தான் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறி வந்தார்கள்.
ஆனால் தேர்தலின் பின்னர் அவர்கள் ஒற்றையாட்சி, 13ஆவது திருத்தச் சட்டமென்று அரசாங்கம் கூறுவதற்கு ஆதரவளிக்கின்றனர். தமிழ் மக்கள் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏமாற்றுத் தனத்தை விளங்கிக்கொண்டுள்ளார்கள்.
அத்துடன் அவர்கள் அரசாங்கத்திடம் விலைபோயுள்ளார்கள் எனவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.