அவுஸ்ரேலியாவில் விமான விபத்து!

அவுஸ்ரேலியாவில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கலோந்திரா விமான நிலையத்திலேயே நேற்று ( 12-சனிக்கிழமை) இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

இந்த விமானம் தரையிறங்க முற்பட்ட வேளையில், ஓடு பாதையில் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விமான விபத்தில் விமானி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த விமானத்தில் பயணித்த நான்கு பயணிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளனர்.