அமெரிக்காவுக்கு உதவத் தயார் : அவுஸ்ரேலியா

வடகொரியா அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுக்கு உதவ முன்வரப் போவதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.

அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்சுடன் பேசியபோது, அவுஸ்ரேலியப் பிரதமர் மெல்கோம் டர்ன்புல் (Malcolm Turnbull) அவ்வாறு கூறினார். பொருளியல் தடைகளை விதிப்பதே, வடகொரியாவைக் கையாள்வதற்கான மேலும் சிறப்பான வழி என்றார்  டர்ன்புல்.

ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றம் கடந்த சனிக்கிழமை, வடகொரியாவுக்கு எதிரான மேலும் சில கடுமையான தடைகளுக்கு ஒப்புதல் அளித்தது.

அந்தத் தடைகளால், வடகொரியா ஆண்டுக்குச் சுமார் ஒரு பில்லியன் டாலர் இழப்பைச் சந்திக்க நேரிடும்.