குமரன்

அவுஸ்ரேலியாவில் வழக்கத்திற்கு மாறான வானிலை

அவுஸ்ரேலியாவின் கிழக்குக் கரையில் வழக்கத்திற்கு மாறான வானிலை நிகழ்வுகள் அண்மைக் காலத்தில் ஏற்பட்டு வருகின்றன. 6,000க்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்களும், டென்னிஸ் பந்து அளவுக்குப் பெரிதான ஆலங்கட்டிகளும் அந்த நிகழ்வுகளில் அடங்கும். குவீன்ஸ்லந்தை அந்த விநோத நிகழ்வுகள் உலுக்கின. அவுஸ்ரேலிய வானிலை ஆய்வகம் அதனால் எச்சரிக்கை விடுக்க நேர்ந்தது. கடந்த இரண்டு நாட்களாக, மோசமான வானிலை நிலவி வருகிறது. புதன்கிழமையன்று பெண் ஒருவர் மின்னலால் தாக்கப்பட்டதாகவும் பதின்ம வயதைக் கொண்ட ஒருவர் மரம் விழுந்து காயமடைந்ததாகவும் ABC News செய்தி நிறுவனம் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட ...

Read More »

அவுஸ்ரேலியாவின் ஐந்து மாநிலங்களிலும் எழுச்சியுடன் மாவீரர் நாள் 2016

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பேர்த், பிரிஸ்பன், அடேலையிட், மெல்பேர்ண் பெருநகரங்களில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு உணர்வெழுச்சியுடன் நினைவுகூர்ந்தனர். சிட்னியில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் அப்துல் ஜபார் கலந்து சிறப்புரையாற்றினார். தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் இம்முறை எழுச்சியுடன் சிறப்பான முறையில் நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மாவீரர் நினைவெழுச்சிநாள் – 2016 – ஒஸ்ரேலியா- மெல்பேர்ண் தமிழீழத்தாய்த் திருநாட்டின் விடுதலைக்காக களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் ஒருசேர நினைவிற்கொள்ளும் தமிழீழ மாவீரர்நாள்- 2016 நிகழ்வுகள் 27-11-2016 ஞாயிற்றுக்கிழமையன்று ...

Read More »

‘கடவுள் இருக்கான் குமாரு’ – விமர்சனம்

இயக்குநர் எம். ராஜேஷின் திரைப்படங்களில் கதை, லாஜிக் என்று பெரிதாக ஏதும் இருக்காது. நாயகன்  தன் காதலைத் துரத்துவது. இருவருக்கும் நேரும் ஊடலும் கூடலும், உதவி செய்கிறேன் என்கிற பேரில் உபத்திரவம் செய்யும் நண்பன். அவருடைய எல்லாத் திரைப்படங்களிலும் இந்த ஒருவரிக்கதைதான் திரும்பத் திரும்ப வரும். இந்த திரைப்படத்திலும் அதேதான். சமகால இளைஞர்களின் கலாய்ப்புத்தன்மையுடன் கூடிய உரையாடல்கள்தான் ராஜேஷ் உருவாக்கும் நகைச்சுவையின் அடிப்படை. வானத்தின் கீழே உள்ள சகல விஷயங்களையும் நபர்களையும் கதறக் கதறக் கலாய்ப்பார்கள். கூடவே பரஸ்பரம் தங்களையும் கிண்டலடித்துக் கொள்வார்கள். அப்போதைய சர்ச்சைகள், ...

Read More »

இந்தியாவில் உலகின் ’மிகப்பெரிய வழிபாட்டிடம்’

டெல்லியிலிருந்து தென்கிழக் கே 140 கிமீ தூரத்தில் இருக்கும் வி்ருந்தாவனில், உலகின் மிக உயரமான மத வழிபாட்டிடம் ஒன்றை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கோயில் 5.5 ஏக்கர் பரப்பளவில் 700 அடி (213 மீ) உயரத்தில் அமையவுள்ளது; “விருந்தாவன் சந்திரோதயக் கோயில்” என்று கருதப்படும் இந்த கோயில் உலகின் மிக உயர்ந்த இந்துக் கோவிலாக இருக்கும் என கருதப்படுகிறது. வத்திக்கானில் இருக்கும் செயிண்ட் பீட்டர்ஸ் பெசிலிக்கா மற்றும் எகிப்தில் இருக்கும் பிரமிடை காட்டிலும் இது பெரியதாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் மிகப் பிரபலமான ...

Read More »

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ஷர்ஜீல் கான், மொகமது ரிஸ்வான் சேர்க்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் நாளையுடன் முடிவடைகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின் ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி பிரிஸ்பேனில் 15-ந்தேதி பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக நடக்க இருக்கிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நியூசிலாந்தில் ...

Read More »

ஆயுத பேனா

அவசர கால ஆயுதமாகவும் இந்த பேனாவைப் பயன்படுத்தலாம். உறுதியான மூலப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு முனையில் பேனா, மற்றொரு முனையில் குத்தி உடைக்கும் கூர்முனையும் மடக்கும் கத்தியும் உள்ளது.

Read More »

பிடல்காஸ்ட்ரோ இறுதி சடங்கில் பங்கேற்க தங்கை மறுப்பு

பிடல் காஸ்ட்ரோ இறுதி சடங்கில் பங்கேற்க கியூபா செல்ல மாட்டேன் என அவரது தங்கை மறுத்து விட்டார். கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ நேற்று முன்தினம் தனது 90 வது வயதில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கியூபாவில் 9 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது. பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு உலகநாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அவரை ‘கொடூர சர்வாதிகாரி’ என்ற வர்ணனையுடன் குற்றம் சாட்டியுள்ளார். மரணம் அடைந்த பிடல் காஸ்ட்ரோவின் ...

Read More »

இரட்டை பெண் இசை அமைப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் விஸ்வநாதன்  ராமமூர்த்தி, சங்கர்    கணேஷ் என்ற இரட்டை இசை அமைப்பாளர்கள் இருந்தார்கள், ஆனால் பெண் இரட்டை இசை அமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் சூலமங்கலம் சகோதரிகளான ராஜலட்சுமி விஜயலட்சுமி. கர்நாடக இசை மேதைகளான சூலமங்கலம் சகோதரிகள் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், பல நூறு பக்தி பாடல்களையும் பாடியுள்ளனர். பக்தி பாடல்களுக்கு பெரும்பாலும் சூலமங்கலம் சகோதரிகளே இசை அமைப்பார்கள். ஆனால் அவர்கள் திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்கள். ஆனால் அது நான்கே நான்கு படங்கள்தான். 1970ல் வெளிவந்த தரிசனம், 1974ல் வெளிவந்த டைகர் ...

Read More »

கூகுள், தன், ‘குரோம்’ வலை உலாவியை மேம்படுத்தியுள்ளது

உலகெங்கும் திறன்பேசிகள் மூலமே பெரும்பாலானோர் இணையத்தை அணுகுகின்றனர். எனவே கூகுள், தன், ‘குரோம்’ வலை உலாவியை திறன்பேசிகளுக்காக மேம்படுத்தியுள்ளது. இப்போது திறன்பேசிக்கான குரோம், 15 சதவீதம் வேகமாக தரவிறக்கம் செய்கிறது. மேலும், திறன்பேசியின் மின் சக்தியை சிக்கனமாக செலவிடுகிறது. உதாரணமாக ஐபோன் இயங்குதளத்தில், 33 சதவீதம் வரை மிச்சம் செய்கிறது. காணொளி படத்துணுக்குகளை வேகமாக தரவிறக்கம் செய்வதோடு, தரவிறக்கம் செய்த காணொளிகளை இணைய இணைப்பு இல்லாமலேயே பார்க்கவும் குரோம் உதவும். ‘2ஜி’ போன்ற மந்தமான இணைப்புகளில், ஒரு இணைய தளத்தின் தேவையான தகவல்களை மட்டும் ...

Read More »

அவுஸ்ரேலிய குடியுரிமைப் பரீட்சையில் மாற்றம்

ustralia’s citizenship test ஆஸ்திரேலிய குடியுரிமைப் பரீட்சையில் மாற்றம் கொண்டுவரப்படலாமென The Daily Telegraph செய்தி வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய குடியுரிமை பெறும் ஒருவர் அதற்கான பரீட்சை ஒன்றை எழுத வேண்டுமென்பது நாமறிந்த விடயம். 20 கேள்விகளைக் கொண்ட இப்பரீட்சையில் ஆஸ்திரேலியா சம்பந்தப்பட்ட பல பொது அறிவுக் கேள்விகள் இடம்பெறுவது வழக்கம். ஆனால் இனிவரும் நாட்களில் ஆஸ்திரேலிய குடியுரிமைப் பரீட்சைக் கேள்விகளை மாற்றியமைக்க அரசு திட்டமிட்டு வருவதாக The Daily Telegraph செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி குடியுரிமைப் பரீட்சை எழுதும் ஒருவர் அவரது பின்னணி மற்றும் ...

Read More »