உலகெங்கும் திறன்பேசிகள் மூலமே பெரும்பாலானோர் இணையத்தை அணுகுகின்றனர். எனவே கூகுள், தன், ‘குரோம்’ வலை உலாவியை திறன்பேசிகளுக்காக மேம்படுத்தியுள்ளது. இப்போது திறன்பேசிக்கான குரோம், 15 சதவீதம் வேகமாக தரவிறக்கம் செய்கிறது. மேலும், திறன்பேசியின் மின் சக்தியை சிக்கனமாக செலவிடுகிறது.
உதாரணமாக ஐபோன் இயங்குதளத்தில், 33 சதவீதம் வரை மிச்சம் செய்கிறது. காணொளி படத்துணுக்குகளை வேகமாக தரவிறக்கம் செய்வதோடு, தரவிறக்கம் செய்த காணொளிகளை இணைய இணைப்பு இல்லாமலேயே பார்க்கவும் குரோம் உதவும்.
‘2ஜி’ போன்ற மந்தமான இணைப்புகளில், ஒரு இணைய தளத்தின் தேவையான தகவல்களை மட்டும் வேகமாக தரவிறக்கம் செய்யும், ‘டேட்டா சேவர்’ வசதியையும் குரோம் நடைமுறைப்படுத்தி இருக்கிறது
Eelamurasu Australia Online News Portal