அவுஸ்ரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ஷர்ஜீல் கான், மொகமது ரிஸ்வான் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் நாளையுடன் முடிவடைகிறது.
இந்த தொடர் முடிவடைந்த பின் ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி பிரிஸ்பேனில் 15-ந்தேதி பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக நடக்க இருக்கிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நியூசிலாந்தில் விளையாடும் அதே வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
அவர்களுடன் ஷர்ஜீல் கான் மற்றும் மொகமது ரிஸ்வான் ஆகியோர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. மிஸ்பா – உல் – ஹக் (கேப்டன்). 2. அசார் அலி, 3. சமி அஸ்லாம், 4. ஷர்ஜீல் கான், 5. யூனிஸ் கான், 6. அசாத் ஷபிக், 7. பாபர் அசாம், 8. சர்பிராஸ் அஹமது (விக்கெட் கீப்பர்). 9. மொகமது ரிஸ்வான், 10. யாசீர் ஷா, 11. மொகமது நவாஸ், 12. மொகமது ஆமிர், 13. வஹாப் ரியாஸ், 14. ரஹத் அலி, 15. சோஹைல் கான், 16. இம்ரான் கான்.
Eelamurasu Australia Online News Portal