அவுஸ்ரேலியாவில் வழக்கத்திற்கு மாறான வானிலை

அவுஸ்ரேலியாவின் கிழக்குக் கரையில் வழக்கத்திற்கு மாறான வானிலை நிகழ்வுகள் அண்மைக் காலத்தில் ஏற்பட்டு வருகின்றன. 6,000க்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்களும், டென்னிஸ் பந்து அளவுக்குப் பெரிதான ஆலங்கட்டிகளும் அந்த நிகழ்வுகளில் அடங்கும்.

குவீன்ஸ்லந்தை அந்த விநோத நிகழ்வுகள் உலுக்கின. அவுஸ்ரேலிய வானிலை ஆய்வகம் அதனால் எச்சரிக்கை விடுக்க நேர்ந்தது.

கடந்த இரண்டு நாட்களாக, மோசமான வானிலை நிலவி வருகிறது. புதன்கிழமையன்று பெண் ஒருவர் மின்னலால் தாக்கப்பட்டதாகவும் பதின்ம வயதைக் கொண்ட ஒருவர் மரம் விழுந்து காயமடைந்ததாகவும் ABC News செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள், வானிலையைப் படமெடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.