இந்தியாவில் உலகின் ’மிகப்பெரிய வழிபாட்டிடம்’

டெல்லியிலிருந்து தென்கிழக் கே 140 கிமீ தூரத்தில் இருக்கும் வி்ருந்தாவனில், உலகின் மிக உயரமான மத வழிபாட்டிடம் ஒன்றை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

இந்த கோயில் 5.5 ஏக்கர் பரப்பளவில் 700 அடி (213 மீ) உயரத்தில் அமையவுள்ளது; “விருந்தாவன் சந்திரோதயக் கோயில்” என்று கருதப்படும் இந்த கோயில் உலகின் மிக உயர்ந்த இந்துக் கோவிலாக இருக்கும் என கருதப்படுகிறது.

வத்திக்கானில் இருக்கும் செயிண்ட் பீட்டர்ஸ் பெசிலிக்கா மற்றும் எகிப்தில் இருக்கும் பிரமிடை காட்டிலும் இது பெரியதாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மிகப் பிரபலமான முக்கிய கட்டடங்களான மலேசியாவின் பெட்ரோனாஸ் டவர், தாய்வானின் தாய்பேய் 101 கட்டடம், மற்றும் தற்போதைய உலகின் மிக உயரமான கட்டடமாக இருக்கும் சவுதி அரேபியாவின் ஜெட்டா டவர் கட்டடம் உள்ளிற்ற பலவற்றிற்கு கட்டமைப்பு பொறியாளராக செயலாற்றிய தார்டன் டொமாசெட்டி உட்பட உலகின் பல முன்னனி நிறுவனங்கள் மற்றும் தொழிட்நுட்ப வல்லுநர்கள் இந்த கட்டடம் குறித்து ஆலோசனை தந்து வருகின்றனர்.