பிடல் காஸ்ட்ரோ இறுதி சடங்கில் பங்கேற்க கியூபா செல்ல மாட்டேன் என அவரது தங்கை மறுத்து விட்டார்.
கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ நேற்று முன்தினம் தனது 90 வது வயதில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கியூபாவில் 9 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு உலகநாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அவரை ‘கொடூர சர்வாதிகாரி’ என்ற வர்ணனையுடன் குற்றம் சாட்டியுள்ளார்.
மரணம் அடைந்த பிடல் காஸ்ட்ரோவின் உடன் பிறந்த தங்கை ஜூனைதா காஸ்ட்ரோ. இவர்பிடல் காஸ்ட்ரோவுக்கு எதிரான கொள்கைகள் உடையவர். தற்போது அவர் அமெரிக்காவின் மியாடியில் தங்கியுள்ளார்.
வருகிற 4- ந்திகதி நடைபெறும் பிடல் காஸ்ட் ரோவின் இறுதி சடங்கில் பங்கேற்பீர்களா? என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் இறுதி சடங்கில் பங்கேற்க மாட்டேன். “அமெரிக்காவை விட்டு ஒரு போதும் கியூபாவுக்கு செல்ல மாட்டேன் என உறுதி பட தெரிவிக்கிறேன்” என்றார்.
Eelamurasu Australia Online News Portal