குமரன்

அவுஸ்ரேலியாவின் அதிசய பவளப்பாறைகள் பாதிக்கப்பட்டுள்ளது

உலகின் மிகவும் அற்புதமான இயற்கை அதிசயங்களில் அவுஸ்ரேலியாவின் கிரேட் பாரியர் ரீஃபும் ஒன்று. கடலுக்கு அடியில் அதன் நிறமும், சுற்றியுள்ள உயிரினங்களும் கண்ணைக்கவரும். ஆனால் இதுவரை இல்லாத வகையில் அது பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மைய ஆய்வு முடிவுவொன்று கூறுகிறது. நீரின் வெப்பம் உயர்வதால் சில பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு பவளப்பாறைகள் அங்கு அழிந்துள்ளன. விஞ்ஞானிகளுடன் சென்று நீருக்கு அடியில் இருக்கும் நிலையை பார்க்க பிபிசிக்கு பிரத்யேக வாய்ப்பு கிடைத்தது. விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், இவற்றை அழிவிலிருந்து காப்பாற்றுவது கடினம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Read More »

‘‘எனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது’’- சுருதிஹாசன்

‘‘வீட்டில் பூஜை அறை கிடையாது. ஆனாலும் எனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது’’ என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். நடிகை சுருதிஹாசன் இதுகுறித்து அளித்துள்ள பேட்டி வருமாறு:– கடவுள் நம்பிக்கை ‘‘எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. கடவுள் மீது இருக்கும் பக்தி சாதாரண நிலைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பிட்ட சாமிதான் என்று இல்லாமல் அனைத்து சாமிகளையும் கும்பிடுகிறேன். எனக்கு கடவுளை வழிபடுவதற்கு யாரும் சொல்லித் தரவில்லை. வீட்டில் பூஜை அறை கூட கிடையாது. ஆனாலும் தானாகவே கடவுள் நம்பிக்கை வந்து விட்டது. எப்படி ...

Read More »

ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கோரியது சிஎன்என்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப் குறித்து நிகழ்ச்சி தயாரிப்பாளர் கிண்டலாக பேசியதற்கு, சிஎன்என் தொலைக்காட்சி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இண்டியானாபோலிஸில் உள்ள கேரியர் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றின்போது, செய்தியாளர் சூசேன் மால்வியக்ஸ் உடன் பேசிக்கொண்டிருந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் டொனால்டு ட்ரம்ப்பை கிண்டல் செய்யும் விதமாக பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ‘சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துரதிருஷ்டவசமான கருத்துக்காக ட்ரம்ப் குழுவிடம் மன்னிப்பு கோருகிறாம்’ என, சிஎன்என் நிறுவனம் அறிவித்துள்ளது. ...

Read More »

நியூசிலாந்து அணியை வீழ்த்தியது அவுஸ்ரேலியா

சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஸ்மித் சதத்தால் 68 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது அவுஸ்ரேலியா. அவுஸ்ரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அவுஸ்ரேலியா  மண்ணில் இன்று தொடங்கியது. சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற அவுஸ்ரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. வார்னர், பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிஞ்ச் தான் சந்தித்த முதல் பந்திலேயே போல்டாகி ரன் கணக்கை துவக்காமல் வெளியேறினார். வார்னர் 24 ரன்கள் சேர்த்தார். ...

Read More »

அவுஸ்ரேலியா போகும் வாணி ராணி குழு

வாணி ராணியில் சீரியலில் தற்போது பரபரப்பான சம்பவங்கள் நடந்து வருகின்றன. காவல்துறையில்   இருந்து தப்பிய ஆர்யாவை கண்டுபிடிக்க கவுதம் முயற்சி செய்கிறான். ராணியின் கணவர் சாமிநாதனை காணாமல் தவித்து வருகிறார் ராணி. பரபரப்பான எபிசோடுகளுடன் பயணப்படும் வாணி ராணி சீரியல் சில எபிசோடுகள் அவுஸ்ரேலியாவில் படமாக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல், ஊட்டி, தென்காசி, குற்றாலம் என்று பயணித்த வாணி ராணி இப்போது அவுஸ்ரேலியாவில் படமாக்கப்பட்டுள்ளது. சரவணன் தன் மனைவியுடன் அவுஸ்ரேலியாவிற்கு தேன்நிலவு போக, அங்கே வில்லி தேஜூவும் பயணிக்கிறாள். இருவரையும் சந்தோசமாக இருக்க விடுவாளா? என்பது ...

Read More »

அவுஸ்ரேலியா-நியூஸிலாந்து இன்று சிட்னியில் பலப்பரீட்சை

வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா சென்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் சேப்பல்-ஹெட்லி ஒரு நாள் போட்டி தொடரின் முதல் ஆட்டம் சிட்னியில் இன்று நடை பெறுகிறது. இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு இந்த ஆட்டம் நடக் கிறது. கடந்த ஆண்டு நடபெற்ற சேப்பல்-ஹெட்லி தொடரை நியூஸிலாந்து அணி 2-1 என வென்றிருந்தது. சமீபத்தில் பாகிஸ் தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற மகிழ்ச்சியில் நியூஸிலாந்து அணி ஒருநாள் போட்டி தொடரை ...

Read More »

அப்பிள் பாதுகாப்பு வளையத்தை ‘வளைத்த’ கேரள வாலிபர்

அப்பிள் நிறுவன கருவிகள் பெரும்பாலும் அதன் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிகம் பெயர் போன ஒன்றாக இருந்து வந்தது. இந்நிலையில் ஆப்பிள் பாதுகாப்பு அமைப்பினை கேரள வாலிபர் ஒருவர் ஹேக் செய்திருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த பொறியியல் மாணவரான ஹேமந்த் ஜோசப் என்பவர் ஆப்பிள் நிறுவனத்தின் அதிக பாதுகாப்பு அம்சம் கொண்ட ஆக்டிவேஷன் லாக்கினை ஹேக் செய்திருக்கிறார். ஆப்பிளின் ஐபோன், ஐபேட், ஐபாட் டாச் மற்றும் ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட கருவிகள் திருடு போனாலோ அல்லது தொலைந்து போனாலோ மற்றவர்கள் பயன்படுத்த முடியாதபடி இந்த ஆக்டிவேஷன் லாக் ...

Read More »

அவுஸ்ரேலிய நீதிமன்றத்தில் பெண் தலைமை நீதிபதி நியமனம்

அவுஸ்ரேலியா உயர்நீதிமன்றத்தில் முதன்முதலாக ஒரு பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், சூசன் கீபெல் ஆவார். அவர் 15 வயதில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர். பின்னர் தன் முயற்சியால் பள்ளிப்படிப்பை பகுதி நேர படிப்பாக படித்து தேறினார். தொடர்ந்து சட்டம் படித்தார். அப்போது வக்கீல் குமாஸ்தாவாகவும் பணியாற்றினார். பின்னர் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். குயின்ஸ்லாந்தில் 1987-ம் ஆண்டு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 1993-ம் ஆண்டு மாகாண உச்ச நீதிமன்றம் நீதிபதி ஆனார். மறு ஆண்டில் பெடரல் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இப்போது அவுஸ்ரேலிய ஐகோர்ட்டு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு!

அவுஸ்ரேலியாவில் மெல்பேர்ன் பொதுப்போக்குவரத்துக் கட்டணம் 5 சதவீதத்தால் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இரண்டு மணிநேரத்துக்கான பஸ், Tram மற்றும் தொடரூந்துப் பயணங்களுக்கான Myki கட்டணம் 20 சதங்களால் அதிகரித்து $4.10 ஆக அறவிடப்படும் என்றும், அதேபோல் முழு நாட்களுக்குமான கட்டணம் $8.20 ஆக உயர்த்தப்பட உள்ளது. இது ஒருபுறம் இருக்க வருடாந்த adult Myki pass கட்டணம் 80 டொலர்களால் அதிகரிக்கப்படுகின்றது. அதேநேரம் concession ticket கட்டணம் 10 சதங்களால் அதிகரித்து $2.05 ஆக மாற்றமடைந்துள்ள அதேவேளை 5 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்றும் ...

Read More »

2.0 படப்பிடிப்பில் ரஜினிகாந்துக்கு காலில் காயம்

சென்னையில் நடந்த ‘2.0’ படப்பிடிப்பின் போது, நடிகர் ரஜினிகாந்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ‘கபாலி’ திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம், ‘2.0’. இந்த படத்தை ஷங்கர் டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், நடிகை எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. ரஜினிகாந்த்-ஷங்கர் கூட்டணியின் முந்தைய படைப்பான ‘எந்திரன்’ படத்தின் 2-ம் பாகமாக இந்த ...

Read More »