அவுஸ்ரேலியாவில் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு!

அவுஸ்ரேலியாவில் மெல்பேர்ன் பொதுப்போக்குவரத்துக் கட்டணம் 5 சதவீதத்தால் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இரண்டு மணிநேரத்துக்கான பஸ், Tram மற்றும் தொடரூந்துப் பயணங்களுக்கான Myki கட்டணம் 20 சதங்களால் அதிகரித்து $4.10 ஆக அறவிடப்படும் என்றும், அதேபோல் முழு நாட்களுக்குமான கட்டணம் $8.20 ஆக உயர்த்தப்பட உள்ளது.

இது ஒருபுறம் இருக்க வருடாந்த adult Myki pass கட்டணம் 80 டொலர்களால் அதிகரிக்கப்படுகின்றது.

அதேநேரம் concession ticket கட்டணம் 10 சதங்களால் அதிகரித்து $2.05 ஆக மாற்றமடைந்துள்ள அதேவேளை 5 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்றும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.