அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப் குறித்து நிகழ்ச்சி தயாரிப்பாளர் கிண்டலாக பேசியதற்கு, சிஎன்என் தொலைக்காட்சி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இண்டியானாபோலிஸில் உள்ள கேரியர் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றின்போது, செய்தியாளர் சூசேன் மால்வியக்ஸ் உடன் பேசிக்கொண்டிருந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் டொனால்டு ட்ரம்ப்பை கிண்டல் செய்யும் விதமாக பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ‘சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துரதிருஷ்டவசமான கருத்துக்காக ட்ரம்ப் குழுவிடம் மன்னிப்பு கோருகிறாம்’ என, சிஎன்என் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘சிஎன்என் தொலைக்காட்சியை கிளிண்டன் நியூஸ் நெட்வொர்க்’ என, ட்ரம்ப் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.