குமரன்

அவுஸ்ரேலியா சிறிலங்காவுக்கு 10 படகுகளை வழங்கியுள்ளது!

வெள்ளத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு அவுஸ்ரேலியா 10 இறப்பர் படகுகளையும், வெளியிணைப்பு இயந்திரங்களையும் வழங்கியுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கான சிறிலங்கன் விமானசேவை விமானத்தின்மூலம் இவ்வுதவிப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இவை நேற்றுக்காலை கொழும்புத் துறைமுகத்திற்கருகிலுள்ள ரங்கலை கடற்படைத் தளத்தில் வைத்து அவுஸ்ரேலியத் தூதுவர் பிறைஸ் ஹட்சிசனால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. உடனடியாகவே இந்தப் படகுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  

Read More »

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து பேட்டிங்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்றைய ஆட்டத்தில் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று (2) நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. மார்டின் கப்தில், 2. ரோஞ்சி, 3. கேன் வில்லியம்சன், 4. ராஸ் டெய்லர், 5. ப்ரூம், ...

Read More »

யாழ்.நூலக எரிப்பு! தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல்! நிகழ்வு

  யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தின் 36ஆவது நினைவேந்தல் நிகழ்வு   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று (1)   மாலை 6.00 மணியளவில் யாழ். பொது நூலகம் முன்பாக  இடம்பெற்றது. அந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்மகளிர் அணி பொறுப்பாளர்  பத்மினி சிதம்பரநாதன் , கட்சியின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர். நினைவு  பகிர்வினை ஆய்வாளர் நிலாந்தன், ஆய்வாளர் ஜோதிலிங்கம், ...

Read More »

மனோத் மார்க்ஸ் Instagram கணக்கில் இறுதியாக பதிவிட்டவை!

300 பயணிகளுடன் பயணித்த மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு புரளியை கிளப்பிய இலங்கையர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த இலங்கையர் விமானத்தில் ஏறுவதற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்னர் சிகார் மற்றும் கெங்ஸ்டர் ரெப் இசையை ரசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். புதன்கிழமை இரவு 11.11 மணியளவில் MH128 என்ற விமானம் விமான நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த சற்று நேரத்தில் மனோத் மார்க்ஸ் என்ற இலங்கையர் தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இந்த நிலையில் விமானத்தை குண்டு வைத்து தகர்ப்பதாக ...

Read More »

3 குழந்தைகளை ஏரியில் மூழ்கடித்து கொன்ற தாயார்!

அவுஸ்ரேலியா நாட்டில் 3 குழந்தைகளை ஏரியில் காருடன் மூழ்கடித்து கொலை செய்த தாயாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தென்சூடான் நாட்டை சேர்ந்த Akon Guode(37) என்ற பெண் அவுஸ்ரேலியாவில் குடியேறி மெல்போர்ன் நகரில் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு வயது, 4 வயதில் இரண்டு குழந்தைகள் மற்றும் 6 வயது என 4 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு 4 குழந்தைகளையும் காரில் ஏற்றிக்கொண்டு தாயார் அவரே ஓட்டிச்சென்றுள்ளார். ஏரி ஒன்றிற்கு சென்ற அவர் காரை தண்ணீரில் ...

Read More »

1000 மடங்கு வீரியம் கொண்ட நோய் எதிர்ப்பு மருந்து!

அமெரிக்காவில் உள்ள ஸ்கிரிப்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய நோய் எதிர்ப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து முன்பு இருந்ததை விட 1000 மடங்கு வீரியம் கொண்டதாக இருக்கிறது. சில நோய்களுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அத்தகைய நோய்களை நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கிதான் குணப்படுத்துகிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறை நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கொடுக்கும்போதும் அந்த மருந்துக்கு கட்டுப்படாத வகையில் வீரியமான கிருமிகள், பாக்டீரியாக்கள் உடலில் உற்பத்தியாகி விடுகின்றன. அப்படி வீரியம் அடையும்போது, இன்னும் வீரியம் கொண்ட மருந்தை வழங்க ...

Read More »

‘சுவாதி கொலை வழக்கு’ படத்தில் யாரையும் தவறாக சித்தரிக்கவில்லை

சுவாதி கொலை வழக்கு’ படத்தை சமூக அக்கறையுடன்தான் இயக்கியுள்ளதாக இயக்குனர் ரமேஷ் செல்வன் கூறியுள்ளார். கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ...

Read More »

மென்பேர்னில் இருந்து புறப்பட்ட விமானத்தில் குண்டுப் புரளி தீவிரவாத செயல் அல்ல!

மென்பேர்னில் இருந்து புறப்பட்ட மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் இலங்கையர் ஒருவர் ஏற்படுத்திய குண்டுப் புரளி, தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையது அல்ல என்று அவுஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு 11.11 மணியளவில் மலேசியன் எயர்லைன்ஸ் விமானம் மெல்பேர்ன் விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் நோக்கிப் புறப்பட்ட சற்று நேரத்தில், அதில் பயணம் செய்த இலங்கையர் ஒருவர் தன்னிடம் குண்டு இருப்பதாகவும், விமானத்தை வெடிக்க வைக்கப் போவதாகவும் சத்தமிட்டார். அத்துடன் அவர் விமானியின் அறைக்குள்ளேயும நுழைய முயன்றார். இதையடுத்து, புறப்பட்ட ஒரு மணிநேரத்திலே அந்த விமானம், ...

Read More »

மலேசிய விமானம் மெல்பேர்னில் அவசரமாக தரையிறக்கம்!

மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர் குண்டுப் புரளி கிளப்பியதுடன் விமானியின் அறைக்குள் நுழைய முயன்றதால் விமானம் அவசரமாக மெல்பேர்ன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. மெல்பேர்னில் இருந்து கோலாலம்பூர் சென்று கொண்டிருந்த மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த இலங்கையர் ஒருவர் தன்னிடம், குண்டு இருப்பதாக கூறி, விமானியின் அறைக்குள் நுழைய முயன்றார். இதனால், விமானி மெல்பேர்ன் விமான நிலையத்துக்கே திருப்பினார். நேற்றிரவு 11.40 மணியளவில் இந்த விமானம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மெல்பேர்ன் விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து. குண்டுப் ...

Read More »

படத்துக்கு தடைகோரும் சுவாதியின் தந்தை!

ரமேஷ் செல்வன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சுவாதி கொலை வழக்கு’ படத்துக்கு சுவாதியின் தந்தை தடை கோரியுள்ளார். கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர ...

Read More »