மென்பேர்னில் இருந்து புறப்பட்ட விமானத்தில் குண்டுப் புரளி தீவிரவாத செயல் அல்ல!

மென்பேர்னில் இருந்து புறப்பட்ட மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் இலங்கையர் ஒருவர் ஏற்படுத்திய குண்டுப் புரளி, தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையது அல்ல என்று அவுஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Manodh-Marks-நேற்றுமுன்தினம் இரவு 11.11 மணியளவில் மலேசியன் எயர்லைன்ஸ் விமானம் மெல்பேர்ன் விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் நோக்கிப் புறப்பட்ட சற்று நேரத்தில், அதில் பயணம் செய்த இலங்கையர் ஒருவர் தன்னிடம் குண்டு இருப்பதாகவும், விமானத்தை வெடிக்க வைக்கப் போவதாகவும் சத்தமிட்டார்.

அத்துடன் அவர் விமானியின் அறைக்குள்ளேயும நுழைய முயன்றார்.

இதையடுத்து, புறப்பட்ட ஒரு மணிநேரத்திலே அந்த விமானம், மீண்டும் மெல்பேர்ன் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

உடனடியாக விமானத்துக்குள் நுழைந்த அவுஸ்ரேலிய கொமாண்டோக்கள், மிரட்டல் விடுத்த இலங்கையரைக் கைது செய்தனர்.

25 வயதுடைய மனோத் மாக்ஸ் என்ற பெயருடைய இலங்கையரே கைது செய்யப்பட்டவராவார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், இந்தச் சம்பவத்துக்கும் தீவிரவாத செயல்களுக்கும் தொடர்பில்லை என்றும் அவுஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் விமானப்பயணச்சீட்டை பெற்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

https://www.facebook.com/victoriapolice/videos/1558317104240420/