குமரன்

நாங்கள் பிரிந்திருந்தாலும் கூட, எங்களது காதல் உண்மையானது !- அமலா பால்

சமீப காலமாக நட்சத்திர பிரபலங்களுக்கு மத்தியிலான திருமண பந்தம் கருத்து வேறுபாடு என்ற ஒற்றை காரணத்தை சுட்டிக்காட்டி விவாகரத்து ஆகிவருகிறது. இதில், சில மாதங்களுக்கு முன்னர் தென்னிந்தியா நட்சத்திர தம்பதிகளான அமலா பால் – இயக்குனர் விஜயும் விவாகரத்து பெற்றனர். இதற்கு அவர் தான் காரணம், இவர் தான் காரணம் என்று பலர் கூறி செய்திகள் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஒரு இளம் நடிகரின் பெயர் விவாகரத்து வாங்கி தரும் வழக்கறிஞர் போல சித்திரிக்கப்பட்டது.ஆனால், உண்மையில் தனது திருமண வாழ்க்கை முற்று பெற்றதற்கான ...

Read More »

மிகவும் குட்டியான செயற்கைக்கோள் விண்மீன்

பால்வெளியில் மிகவும் குட்டியான செயற்கைகோள் விண்மீன் ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சிறிய செயற்கைகோள் விண்மீன் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே இது தான் சிறியதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. விர்கோ என்று பெயரிடப்பட்டுள்ள செயற்கைக்கோளானது புதிய விண்மீனின் திசையில் அமைந்துள்ளது. ஜப்பானில் உள்ள டோஹோகு பல்கலைக் கழக விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் இந்த விண்மீன் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இதுவரை 50 செயற்கைக்கோள் விண்மீன் திரள்கள் பால்வெளிக்கு செல்லும் திசையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 40 விண்மீன்கள் சிறிய நெட்டுருளை வடிவான வகையை சேர்ந்தவை ...

Read More »

அவுஸ்ரேலிய தேர்வுக்குழு தலைவர் பதவியை பற்றி சிந்திக்கும் ரிக்கி பாண்டிங்

அவுஸ்ரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவி குறித்து தன்னிடம் ஆலோசித்தால் அதனை ஏற்றுக்கொள்வது பற்றி சிந்திப்பேன் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு சேர்மனாக ரோட் மார்ஷ் இருந்தார். நீண்ட காலமாக இந்த பதவியில் இருந்த மார்ஷ் அடுத்த வருடம் மத்தியில் பதவியில் இருந்து விலக இருப்பதாக கூறினார். ஆனால் அவுஸ்ரேலியா  சமீபத்தில் இலங்கை அணிக்கெதிராக தொடரை 0-3 எனவும், தற்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக தொடரை 0-2 எனவும் இழந்துள்ளது. அத்துடன் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் இழந்தது. ...

Read More »

அவுஸ்ரேலியாவின் ஒருநாள் அணியில் புதுமுக வீரர்

நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவுஸ்ரேலியா விளையாட இருக்கிறது. இதற்கான அவுஸ்ரேலியா அணியில் புதுமுக வீரர் இடம்பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று(24) அடிலெய்டில் பகல் – இரவு ஆட்டமாக தொடங்குகிறது. இந்த போட்டி முடிந்த பின்னர் அவுஸ்ரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சேப்பல்- ஹெட்லி ஒருநாள் ...

Read More »

நாளை தென்ஆப்பிரிக்கா–அவுஸ்ரேலியா இடையிலான போட்டி

பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் தென்ஆப்பிரிக்க கப்டன் பிளிஸ்சிஸ் அபராதத்தோடு தப்பினார். பிளிஸ்சிஸ் மீது புகார் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் ஹோபர்ட்டில் நடந்த முதல் இரு டெஸ்டுகளில் தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. தென்ஆப்பிரிக்கா–அவுஸ்ரேலியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நாளை (வியாழக்கிழமை) இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இது பகல்–இரவாக நடத்தப்படும் டெஸ்ட் போட்டியாகும். முதல் ...

Read More »

அவுஸ்ரேலியாவிடம் இந்தியா தோல்வி

4 நாடுகள் விளையாடும் ஹாக்கி தொடரில் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா 2-3 என தோல்வியடைந்தது. இந்தியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா ஆகிய நான்கு அணிகள் மோதும் ஹாக்கி தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நம்பர் ஒன் அணியான அவுஸ்ரேலியாவும், சமீபத்தில் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரை வென்ற இந்தியாவும் பலப்பரீட்சை நடத்தின. 21-வது நிமிடத்தில் இந்தியாவின் ரூபிந்தர் பால் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு பதிலடியாக ஆஸ்திரேலியாவின் ஜெரேமி ஹெய்வுட் (24 மற்றும் ...

Read More »

போலி கூகுள் இணையதளம்..எச்சரிக்கை

கூகுள் இணையதளம் போன்ற போலி இணையதளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இணைய தேடுபொறி வசதியை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான கூகுள் பெயரில், அதேபோன்றதொரு போலி இணையதளம் இயங்குவதாக ’தி நெக்ஸ்ட் வெப்’ (The Next Web) எனும் இணையதளம் கண்டறிந்துள்ளது. கூகுள் தளத்தின் முகப்புப் பக்கத்தில் தோன்றும் Google.com என்றில்லாமல், போலி இணையதளத்தில் முதல் எழுத்தான ‘G’ என்ற எழுத்தின் அளவு சிறியதாக இருப்பதையும் தி நெக்ஸ்ட் வெப் அடையாளம் கண்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு வாக்களியுங்கள் என்ற கோரிக்கையுடன் வெளியான போலி ...

Read More »

எழுக தமிழ் பேரணி மட்டக்களப்பில் எதிர்வரும் ஜனவரி மாதம்

தமிழ் மக்கள் பேரவையால் நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியின் இரண்டாவது பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வைத்தியக் கலாந்தி லக்ஸ்மன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் நேற்றைய தினம் கொழும்பில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், செயற்கையாக கட்டமைக்கப்பட்ட சூழ்நிலைகளாலும், நிர்ப்பந்தங்களாலும், அழுத்தங்களாலும், எமது மக்களின் நீதிக்கான பயணம் தடைப்படலாம் என்ற ஐயப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே அதனைத் தடுக்கும் வகையில் ...

Read More »

இளையராஜாவின் ஆங்கில படம்- அவுஸ்ரேலிய பெண்ணின் கதை

“அவள் ஒரு ஆஸ்திரேலிய பெண்… பெற்றோர் கிடையாது. அன்பு, அரவணைப்பு, பாசம், நேசம், உறவுகள் அறிந்தவள் இல்லை. ஒரு இந்தியப் பையன், இவள் மீது காட்டும் அன்பு, காதலாய் மாறுகிறது. அவள் அந்தக் காதலைப் பூரணமாய் உணரும் அந்தத் தருணத்தில்… ஒரு பாடல் வேண்டும் ” இயக்குநர் சொல்லி முடிக்கிறார். சரியாக எட்டு நிமிடங்கள் கரைகிறது. அந்த கிடாரில் அற்புதமாய் ஒரு ட்யூன் உருவாகிறது. கொஞ்சம் கொஞ்சமாய் அது முழுப் பாடலாய் உருவாகிறது. ராஜா… இளையராஜா இசையமைத்திருக்கும் முதல் ஆங்கிலத் திரைப்படம் . அந்த ஆங்கிலப் ...

Read More »

பாதுகாப்புச் செயலரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும்! -கலாநிதி சரத் விஜேசூரிய

சிறீலங்காப் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யவேண்டுமென நீதிக்கான தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் கலாநிதி சரத் விஜேசூரிய கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று நடாத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சிக்கு எதிராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறீசேனவிடம் தான் முறைப்பாடு ஒன்றை கையளித்துள்ளதாகவும், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கலாநிதி சரத் விஜேசூரிய தெரிவித்தார். சிறீலங்காவில் ஆட்சி மாற்றத்துக்கு உதவிய சிவில் அமைப்புகளை உள்ளடக்கிய நீதிக்கான தேசிய அமைப்பின் ...

Read More »