சமீப காலமாக நட்சத்திர பிரபலங்களுக்கு மத்தியிலான திருமண பந்தம் கருத்து வேறுபாடு என்ற ஒற்றை காரணத்தை சுட்டிக்காட்டி விவாகரத்து ஆகிவருகிறது. இதில், சில மாதங்களுக்கு முன்னர் தென்னிந்தியா நட்சத்திர தம்பதிகளான அமலா பால் – இயக்குனர் விஜயும் விவாகரத்து பெற்றனர்.
இதற்கு அவர் தான் காரணம், இவர் தான் காரணம் என்று பலர் கூறி செய்திகள் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஒரு இளம் நடிகரின் பெயர் விவாகரத்து வாங்கி தரும் வழக்கறிஞர் போல சித்திரிக்கப்பட்டது.ஆனால், உண்மையில் தனது திருமண வாழ்க்கை முற்று பெற்றதற்கான காரணத்தை அமலா பால் கூறியுள்ளார்.
18 வயதில் நடிக்க வந்தேன். 23 வயதில் காதலித்து திருமணம் செய்துக் கொண்டேன். 24 வயதில் திருமண வாழ்க்கை முற்று பெற்றுவிட்டது. இதற்கெல்லாம் காரணம் நான் சிறு வயதிலேயே இல்லறத்தில் இணைந்தது தான்.
எனக்கு அறிவுரை கூற சரியான ஆட்கள் இல்லாமல் போய்விட்டனர். இதனால் தவறான முடிவுகள் எடுத்துவிட்டேன். எனது தவறுகளில் இருந்து நான் நிறைய கற்றுகொண்டேன் என்கிறார் அமலா பால்.
நான் இன்னும் விஜயை காதலிக்கிறேன். விவாகரத்துக்கு பிறகு நான் நிறைய முறை அழுதுள்ளேன். விஜய் எப்போதுமே எனது வாழ்க்கையில் முக்கியமான நபர். நாங்கள் பிரிந்திருந்தாலும் கூட, எங்களது காதல் உண்மையானது, என அமலா மேலும் கூறியுள்ளார்.