குமரன்

வருடந்தோறும் சிறந்த ஓவியர்களுக்கு விருது- சூர்யா

எனது தந்தை பெயரில் வருடந்தோறும் ஓவியப்போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு சிறந்த ஓவியருக்கான விருதுகள் வழங்க திட்டமிட்டு உள்ளோம் என சூர்யா கூறினார்.நடிகர் சிவகுமாரின் 75-வது பிறந்தநாள் விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவின்போது சிவகுமாரின் மகனும், நடிகருமான சூர்யா கூறியதாவது:- என் தந்தையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் நோக்கத்தில் அவர் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக நடத்தினோம். அதற்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஏராளமானோர் இந்த கண்காட்சியை கண்டுகளித்தனர். எனது தந்தை பெயரில் வருடந்தோறும் ஓவியப்போட்டி ...

Read More »

அவுஸ்ரேலியா புகலிடக்கோரிக்கையாளரின் மனு நிராகரிக்கப்பட்டது

பப்புவா நியூகினியின் மானுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 590 புகலிடக் கோரிக்கையாளர்களை, அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பி வைப்பதுடன்,அவர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்ட காரணத்தினால் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி அந்நாட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களும்  நிராகரிக்கப்பட்டுள்ளன. குறித்த மனுக்களில் 590 புகலிடக் கோரிக்கையாளர்களும் கையெழுத்திடாததினால் அவை செல்லுபடியாகாது என்று ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில் வாதாடிய ப்புவா நியூகினி சட்டத்தரணிகள் குறிப்பிட்டதை அடிப்படையாகக் கொண்டு இரு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் தடுப்பு முகாமில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களைச் ...

Read More »

ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகையில் இசை நிகழ்ச்சி நடத்தும் எஸ்.பி.பி.

பல மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி ’கின்னஸ்’ புத்தகத்தில் இடம்பிடித்துள்ள ’பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்பிரணியம் ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 1966-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் பின்னணிப் பாடகராக அறிமுகமான எஸ்.பி. பாலசுப்ரமணியம், 1969-ம் ஆண்டு வெளியான ‘சாந்தி நிலையம்’ படத்தில் ‘இயற்கை என்னும் இளையகன்னி’ என்ற மனதை மயக்கும் மெல்லிசை பாடலின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். பின்னர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான அடிமைப்பெண் படத்தில் ...

Read More »

உலகின் மிக ஒல்லியான டிஸ்பிளே கொண்ட கணினி

உலகிலேயே மிகவும் ஒல்லியான டிஸ்பிளே கொண்டுள்ள கணினியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ”the Surface Studio AIO”என பெயரிடப்பட்டுள்ள இந்த கணினியில்,12.5 மி.மீட்டர் அளவே உள்ள ஒல்லியான டிஸ்பிளே உள்ளது.இந்த கணினித் திரை 13.5 மில்லியன் பிக்சல் திறன் கொண்டிருப்பதால்,நிறங்களை மிகத் தெளிவாக வெளிப்படுத்தும்.இதனால் இந்த கணிணி வீடியோ கிராபர்கள்,புகைப்படக்காரர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.  சிக்ஸ்த் ஜெனரேசன் இண்டல் கோர் பிராசசர்,1 டெராபைட் அல்லது 2 டெரா பைட் மெமரி,8 ஜிபி,16 ஜிபி அல்லது 32 ...

Read More »

அவுஸ்ரேலிய பேருந்தில் இந்தியர் எரித்துக் கொலை

அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்மீத் அலீஷீர் என்ற பேருந்து ஓட்டுநர் எரித்துக்கொல்லப்பட்டுள்ளார். பிரிஸ்பேனில் பேருந்து ஓட்டுநராக பணிபுரியும் மன்மீத், பேருந்து ஓட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒருவர் எரி திரவம் ஒன்றை மன்மீத் மீது ஊற்றியுள்ளார். அடுத்த கணமே, தீக்குச்சியைக் கிழித்து அவர் மீது வீசிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதில் மன்மீத் அந்த இடத்திலேயே தீயில் கருகி பலியாகியுள்ளார். அப்போது, பேருந்தில் இருந்த பொதுமக்கள் அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். தீ பேருந்து முழுவதும் பரவுவதற்குள் அனைத்து பயணிகளும் பேருந்திலிருந்து இறங்கிவிட்டதால் ...

Read More »

பெற்ற மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்திய பெற்றோர்

அவுஸ்ரேலியாவை சேர்ந்த பெற்றோர் தாங்கள் பெற்ற மகளை கடந்த 15 வருடங்களாக பாலியல் ரீதியில் துன்புறுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் தந்தை கூர்மையான ஆயுதங்களைக்கொண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கொடூரமாக துன்புறுத்தியதாகவும் சிட்னி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்த பெண்ணை மூன்று நாட்களாக பிளாஸ்டிக் பெட்டியில் பூட்டி ஷெட்டில் அடைத்து வைத்துள்ளனர். பெண்ணின் பெற்றோர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. 59 வயதுடைய தந்தைக்கு 48 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் 36 ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகு பரோலில் வெளிவர தகுதி உடையவர் ...

Read More »

அவுஸ்ரேலிய தீம் பார்க்கை திறப்பதில் மேலும் தாமதம்

அவுஸ்ரேலியாவில் நான்கு பேரை பலிகொண்ட தீம் பார்க்கை மீண்டும் திறக்கும் முடிவுக்கு காவல்துறை ஆட்சேபம் தெரிவித்ததால் மேலும் சில நாட்கள் மூடப்பட்டிருக்கும். அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாநிலத்தில் சுற்றுலாவாசிகள் அதிகமாக வருகைதரும் கோல்ட் கோஸ்ட் நகரின் கூமோரா பகுதியில் ‘டிரீம் வேர்ல்ட்’ என்னும் பிரபல தீம் பார்க் ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் உள்ள முக்கிய பொழுதுபோக்கு அம்சமான ‘தண்டர் ரிவர் ரேபிட் ரைட்’ என்னும் அலையடிக்கும் ஆற்றுநீரில் பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை குகைகள் மற்றும் மரப்பாலங்களை கடந்து ஆறுபேர் அமர்ந்து செல்லும் பரிசல் சவாரி ...

Read More »

சுவிஸில் ஈழத்தமிழ் இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு- ஒருவர் பலி

வெண்பனி தேசமென செல்லமாக அழைக்கப்படும் சுவிட்சலாந்து நாட்டின் சொலத்துாண் மாநிலத்தில் ரயில் நிலையத்தின் கீழ்த் தளத்தில் உள்ள தமிழர் ஒருவருக்குச் சொந்தமான கடையில் தொழில் ரீதியில் நண்பர்களாக இருந்த இருவரிடம் ஏற்பட்ட தகராறு நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சூட்டில் முடிந்துள்ளது. சொலத்தூண் மாநகரில் பிரபலமான சோலோ மூவி உரிமையாளர் வசி என்பவராலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோலோ மூவியில் சில ஆண்டுகளுக்கு முன் வேலை செய்து தற்சமயம் தனியாக தொழில் புரியும் நீதன் என்பவருடன் நீண்டநாட்களாக முறுகல் நிலையில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ...

Read More »

சீனாவின் ஆப்பிள் சியோமி..!!

சியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன் இன்று சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில நாட்களாகக் கிசுகிசுக்கப்பட்டு வந்த எம்ஐ நோட் 2 கருவி இன்றைய புதுவரவாக அமைந்திருக்கின்றது. சீனாவின் ஆப்பிள் என அழைக்கப்படும் சியோமியின் புதுவரவு கருவியில் வழங்கப்பட்டுள்ளது ஏகப்பட்ட சிறப்பம்சங்கள். ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைப் போல் சியோமி எம்ஐ நோட் 2 கருவியில் dual-curved டிஸ்ப்ளே மற்றும் 3G கிளாஸ் பேனல் கொண்டுள்ளது. 5.7 இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் 3D கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.

Read More »

ஜெயலலிதாவாக மாற ஆசைப்படும் த்ரிஷா

முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க ஆசைப்படுவதாக த்ரிஷா தெரிவித்துள்ளார். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள கொடி படம் தீபாவளிக்கு வெளிவருகிறது. படத்தில் வில்லித்தனம் கலந்த அரசியல்வாதியாக நடித்துள்ளார் த்ரிஷா. இந்நிலையில் த்ரிஷாவுக்கு புது ஆசை பிறந்துள்ளது. ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என ஆசையாக உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவாக நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என த்ரிஷா தெரிவித்துள்ளார்.  

Read More »